திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயம் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவரால் திறந்துவைக்கப்பட்டது. கழகத் தலைவர் அறிவாலயத்தில் தலைமைக் கழக நிர்வாகிகளை அவர்கவர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறைகளில் அமர வைத்தார். தலைமை நிலைய செயலாளருக்கென ஒதுக்கப்பட்ட அறையில் தலைமை நிலைய செயலாளர் பூச்சி எஸ்.முருகனை அமர வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் அமைச்சர் க.பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்