விவேக் சாதி மத பாகுபாடுகளை வெறுத்த கலைஞன். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சமூக நீதிபேசியவர். எல்லோருக்கும் பொதுவான மனிதராக வாழ்ந்து மறைந்ததால் தான் அவர் புகழ் இன்னும்அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனா காலத்தில் செல்போன் மூலம் தான் நெருங்கிய நட்புஆனோம். தமிழ்நாட்டை பசுமை சோலையாக மாற்ற வேண்டும் என்பது அவர் லட்சியம். நடிப்பு போககிடைக்கும் நேரம் எல்லாம் மரக்கன்று நடுதலிலேயே கவனம் செலுத்தினார். அவர் நட்ட 30 லட்சம்மரக்கன்றுகள் என்பது அசாத்திய சாதனை. ஆனால் அவருக்கு ஒரு ஆசை இருந்தது. ‘பூச்சி சார்… தேவர்ஐயா வாழ்ந்த பசும்பொன்ல போய் அவருக்கு மரியாதை செலுத்திட்டு அங்கே மரக்கன்று நடணும்…’. கொரோனாவுக்கு பின் நிச்சயம் செல்லலாம் என்று சொல்லி இருந்தேன். அவரது ஆசை நிறைவேறும்முன்பே காலம் முந்திக் கொண்டது. ஆனால் அவரது வார்த்தைகள் காதுகளில் ஒலித்துக்கொண்டேஇருந்தது. நேற்று திடீர் என்று ஓர் எண்ணம்… இன்று காலை பசும்பொன்னில் அவரது ஆசையைநிறைவேற்றி விட்டேன். அருகில் விவேக் நின்றுகொண்டிருப்பதை போன்றே இருந்தது. அவர்மறையவில்லை. நாம் நடும் ஒவ்வொரு மரக்கன்றிலும் வாழ்வார். இவ்வாறு பழம்பெறும் நடிகர்சிசசூரியனின் மகனும் தமிழ்நாடு வீட்டுவசதித்துறை தலைவருமான பூச்சி முருகன் கூற்னார்******