பள்ளி மாணவர்களுக்கு, சாலை வசதி சீரமைத்தல், தெருவிளக்கு சரி செய்தல், போன்ற அடிப்படைப் பிரச்சினைகளுக்கு புகார் அளிப்பது குறித்தும், பசுமையைப் பாதுகாத்தல், சாலை விதிகளை கடைபிடித்தல் போன்ற பல்வேறு சமூக பொறுப்புணர்வினை புதுயுகம் தொலைக்காட்சியின் “இளம்படை” நிகழ்ச்சி மூலம் செய்துவருகின்றனர். இந்த வாரம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் லிட்டில் பட்ஸ் மெட்ரிக் பள்ளியில் இளம்படை துவக்க விழா நிகழ்ச்சி நடந்துள்ளது. துவக்க விழாவில் இளம்படை வீரர்கள் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடியது , முதல் விழிப்புணர்வு உரை வழங்கிய பல்வேறு நிகழ்வினை இந்த வார நிகழ்ச்சியில் காணலாம். ஞாயிறு தோறும் மதியம் 12:00 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை மக்கள் ஊடக மையத்தின் மூலம் நிகழ்ச்சியை சித்ரவேல் இயக்கிவருகிறார்.பிருந்தா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.