புகழ் மற்றும் ஈடன் தயாரிப்பில் அரவிந்த் ஶ்ரீநிவாசன் இயக்கத்தில் கிஷன் தாஸ், ராஜ் அய்யப்பன், பாலசரவணன், விமல்,ஸ்ம்ருதி வெங்கட், கீதா கைலாசம், ஶ்ரீஜா ரவி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “தருணம்”. கிஷன் தாஸ் இடைநீக்கம் செய்யப்பட்ட ஒரு போலீஸ் அதிகாரி. ஸ்ம்ருதிக்கும் கிஷன் தாசுக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டுள்ளது. ஸ்ம்ருதி குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ராஜ் அய்யப்பனும் குடியிருக்கிறார். ஷ்ரிமதி ராஜ் அய்யப்பனுடன் நண்பராக பழகுகிறார். ஆனால் ராஜ் அய்யப்பன் ஸ்ம்ருதியை அடைய ஆசை படுகிறார். ஒருநாள் மதுபோதையிலிருந்த ராஜ் அய்யப்பன் ஸ்ம்ருதியின் வீட்டுக்குச் சென்று அவளை வன்புணர்வுக்கு பலாத்காரம் செய்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ம்ருதி, ராஜ் அய்யப்பனை கீழே தள்ளுகிறார். கீழே விழ்ந்த ராஜ் அய்யப்பன் தலையில் அடிபட்டு இறந்து விடுகிறார். இந்த நேரத்தில் திருமணத்துக்கு நிச்சியக்கப்பட்டிருந்த மணமகனான போலீஸ் அதிகாரி கிஷன் தாஸ், ஸ்ம்ருதியின் வீட்டுக்கு வந்து இறந்து கிடக்கும் ராஜ் அய்யப்பனின் உடலை பார்த்து விடுகிறார். இப்போது மனைவியாக வரப்போகும் ஸ்ம்ருதியை கிஷன் தாஸ் காப்பாற்றுகிறாரா? அல்லது இல்லையா? ராஜ் அய்யப்பன் கீழே விழுந்ததால் இறந்தாரா? அல்லது கொலை செய்ப்பட்டாரா? கொலை என்றால் யார் செய்தது? கொலைக்கான காரணம் என்ன? என்பதுதான் கதை. படத்தின் ஆரம்ப காட்சியிலிருந்து இடைவேளை வரை கிஷன் தாஸ், ஸ்ம்ருதி, ராஜ் அய்யப்பன். பாலசரவணன், கிஷன் தாசின் பெற்றோர்கள் ராஜ் அய்யப்பனின் பெற்றோர்கள் ஆகியோர்களின் மென்மையான உரையாடலாகவே திரைக்கதை ஊர்ந்து செல்கிறது. ஆனால் இடைவேளைக்குப் பிறகு உச்சக்கட்ட காட்சிவரை பார்வையாளர்களை இருக்கையின் நுனிக்கு வந்து அமர வைக்கிறார் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன். அடுத்தடுத்து வேகமெடுக்கும் காட்சிகள் திரையரங்கை முழுமையாக ஆக்கிரமித்து விடுகிறது. எந்தவிதமான பதட்டமும் இல்லாமல் சில போலீஸ் அதிகாரிகளுக்கே உரித்தான கிரிமினல் மூளையுடன் நடித்திருக்கும் கிஷன் தாசின் நடிப்பும், அடுத்து என்ன நேரிடுமோ என்ற பயத்தை தன்முகத்தில் காட்டி நடித்திருக்கும் ஸ்ம்ருதியின் நடிப்பும் அருமையாக உள்ளது. பாலசரவணனின் நகைச்சுவையும் அஷ்வின் ஹேமந்தின் இசையும் ராஜா பட்டாசார்ஜியின் ஒளிப்பதிவும் படத்த்குற்கு பக்கபலமாக துணை நிற்கிறது. யாரும் எதிர்பார்க்காத திருப்புமுனை முடிவுடன் அடுத்த பாடத்திற்கு படத்தை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் அரவிந்த் ஶ்ரீநிவாசன். மதிப்பீடு 5க்கு 3.5.