புதுச்சேரி காமாட்சியம்மன்கோயில் நிலத்தை அபகரித்துள்ள பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் – ரிச்சர்ட்ஸ்ஜான்குமார் மற்றும் அரசு அதிகாரிகளைக் கைது செய்க! – புதுச்சேரியில் ஆவணங்களை வெளியிட்டு, தெய்வத் தமிழ்ப் பேரவை ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி – பாரதி வீதியிலுள்ள பழம்பெருமை வாய்ந்தஅருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயிலுக்குச்சொந்தமான நிலத்தை போலி பத்திரங்கள் வழியேஅபகரித்த வில்லியனூர் சார் பதிவாளர் உட்பட 13 பேர்இதுவரை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஆனால், அரசு அதிகாரிகளுக்குஆணையிட்ட மேல் அதிகாரிகளோ, இதற்குப்பின்னணியாகச் செயல்பட்ட அரசியல்வாதிகளோஇதுவரை கைது செய்யப்படவில்லை!

 

குறிப்பாக, மாவட்டப் பத்திரப் பதிவாளர் திரு. இரமேஷ்,வட்டாட்சியர் திரு. பாலாஜி உள்ளிட்ட அரசுஅதிகாரிகளைக் கைது செய்து விசாரிக்க வேண்டும். அதேபோல், கோயில் நிலத்தை தனது குடும்பத்தினரின்பெயரில் அபகரித்துக் கொண்டுள்ள பா.ஜ.க. சட்டமன்றஉறுப்பினர்கள் ஜான்குமார் மற்றும் அவரது மகன்ரிச்சர்ட்ஸ் ஜான்குமார் ஆகியோரைக் கைது செய்துவிசாரிக்க வேண்டும்.

 

புதுச்சேரி அரசு, கோயில் நிலங்களை கோயில் தொடர்பான அல்லது அறநிலையத்துறை தொடர்பான பிற பணிகளுக்கு விற்பனையோ, அடமானமோ வைக்கத் தடை விதித்து, தனிச்சட்டம் இயற்ற வேண்டும். கோயில் நிலங்களைப் பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளிலிருந்து மீட்கவும் உறுதியாகச் செயல்பட வேண்டும்.

 

மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், சட்டமன்ற உறுப்பினர்கள் ஜான்குமார் மற்றும் ரிச்சர்ட்ஸ் ஜான்குமாரின் குடும்பத்தினர் பெயரில் கோயில் நிலம் வாங்கப்பட்டது குறித்த ஆவணங்களை வெளியிட்டும்,இன்று செவ்வாய் (04.07.2023) காலை 11  மணியளவில்,புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தெய்வத்தமிழ்ப் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்  எழுச்சியுடன் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு, தெய்வத் தமிழ்ப் பேரவை புதுச்சேரிஒருங்கிணைப்பாளர் திரு.  சிவ. மு. இராசாராம் அவர்கள்தலைமை தாங்கினார். திரு. தே. சத்தியமூர்த்தி (தெய்வத் தமிழ்ப் பேரவை), திரு. அசோக்ராசு (புதுச்சேரி தெற்கு, செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்), திரு. முருகன்(தொரவி செயலாளர், த.தே.பே.), திரு. குமார் (ஐவேலிகிளைச் செயலாளர், த.தே.பே.) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப்பொதுச்செயலாளரும், தெய்வத் தமிழ்ப் பேரவை – செயற்குழு உறுப்பினருமான திரு. க. அருணபாரதிஅவர்கள் முழக்கங்கள் எழுப்பி, தொடக்கவுரையாற்றியதுடன், கோயில் நில விற்பனை தொடர்பான ஆவணங்களை வெளியிட்டு உரையாற்றினார்.

நாம் தமிழர் கட்சி – புதுச்சேரி பொருளாளர் திரு. இளங்கோவன், திரு. பா. சண்முகம் (தலைவர், புதுவைமாநில விஸ்வகர்ம மகாஜன சங்கம்), திரு. கோ. அழகர்(புதுச்சேரி தலைவர், தமிழர் களம்), திரு. ச. மூர்த்தி(தலைவர், விஸ்வகர்ம முன்னேற்றக் கழகம்), திரு. இரா. முருகானந்தம் (தலைவர், மனித உரிமைகள் மற்றும்நுகர்வோர் பாதுகாப்புக் கழகம்), திரு. ஆர். மோகனசுந்தரம் (தலைவர், அகில இந்திய மனிதஉரிமைகள் கழகம்), திரு. து. இரமேசு (புதுச்சேரிசெயலாளர், நாம் தமிழர் – தொழிலாளர் நலச்சங்கம்),திரு.  ஜெ. தனாளன் (பொதுச்செயலாளர், கைவினைஞர்வாழ்வுரிமைக் கட்சி) உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர்பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்க புதுச்சேரி செயலாளர் திரு. இரா. வேல்சாமி ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்தார். தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரபோஸ் நன்றி கூறினார். இவ்வார்ப்பாட்டத்தில், திரளான மெய்யன்பர்கள் பங்கேற்றனர்.