“இவன் தந்திரன்” படத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பம்

‘ஜெயம் கொண்டான்’ படம் மூலம் தமிழ் திரைப்பபட உலகில் இயக்குநராக அறிமுகமானவர் மணிரத்னத்தின் உதவியாளர் ஆர்.கண்ணன். வெற்றி பெற்ற இவரது பல படங்களில் ‘இவன் தந்திரன்’ படமும் மாபெரும் வெற்றி பெற்ற படம். ஏழு வருடங்களுக்கு பின் இதன் இரண்டாம் பாகத்தை உருவாக்குகிறார் ஆர்.கண்ணன். சரண் நாயகனாக நடிக்கிறார். இவரின் ஜோடியாக நடிக்கும் நடிகை தேர்வு நடை பெற்றுவருகிறது.  மேலும், சமுத்திரகனி, தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் நரேன், கலைராணி மற்றும் பல முக்கிய நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.********

கதை-திரைக்கதை-வசனம்-தயாரிப்பு & டைரக்‌ஷன் : ஆர்.கண்ணன் இசை: தமன்  ஒளிப்பதிவு: பால சுப்ரமணியெம் ஏற்கனவே , ஹன்சிகா முதன் முதலாக இரட்டை வேடத்தில் கலக்கிய ‘காந்தாரி’ படத்தை இயக்கி வருகிறார். இப் படத்தை ஸ்பெஷல் ஷோ பார்த்த திரை உலகினர் சிலர் கண்ணனையும், ஹன்சிகாவையும் பாராட்டி வருகின்றனர். இப் பொழுது இதன் பிசினஸ் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.