ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மெண்ட் , தென்கொரியாவின் ஃபிளிக்ஸ் ஓவனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தம்

சென்னையைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனமான ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட்,தென்கொரிய தயாரிப்பு நிறுவனமான ஃபிளிக்ஸ் ஓவனுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இந்தோ- கொரிய திரைப்படத்துறையில் கூட்டு முயற்சிகளை அதிகரித்துக் கொள்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுளளது. இந்த கூட்டாண்மை இந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் குறிப்பாக தமிழ் மற்றும் இந்திய படைப்பாளிகள் தென்கொரியாவில் படப்பிடிப்பு நடத்த புதிய வழிகளை திறக்கும். அதே சமயத்தில் இந்திய பார்வையாளர்களுக்கு கொரியன் கன்டென்டுகளை வழங்குவதற்கும் உதவும்.*******


தென் கொரிய திரைப்படங்கள், இணைய தொடர்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதும் பெரும் புகழை பெற்றுள்ளன. தமிழ் பார்வையாளர்கள் மற்றும் டிஜிட்டல் தள பார்வையாளர்கள், கொரிய படைப்பாளிகளின் கதை சொல்லலுக்கு பாராட்டை தெரிவிப்பதில் முன்னிலை வகிக்கின்றனர். இந்த வளர்ந்து வரும் தொடர்பை உணர்ந்து ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஃபிளிக்ஸ் ஓவன் ஆகியவை பல்வேறு கலாச்சார சினிமா அனுபவங்களை உருவாக்குவதற்காக கரம் கோர்த்துள்ளன.