முருகதாஸ் நடிப்பில் ஹென்றி இயக்கய காவிய படைப்பு “ராஜாமகள்“. அண்ணன் தங்கைக்கு ஒரு“பாசமலர்” என்றால், தந்தை மகளுக்கு “ராஜா மகள்“. முருகதாஸ் தனது மனைவி மகளுடன் வாடகை வீட்டில் குடியிருக்கிறார். 7 வயதான மகள் பிரித்திக்ஷா மீது அளவற்ற பாசம்வைத்துள்ளார். மகளும் தந்தை மீது அளவற்ற பாசம் வைத்துள்ளார். தனது மகள் விரும்பி கேட்கும் எந்தபொருளையும் இல்லை என்று சொல்லாமல் வங்கி கொடுக்கிறார் முருக்தாஸ். ஒருமுறை ஒரு பங்களாவைகாட்டி “இந்த பங்களா வீட்டை வாங்கி கொடு அப்பா” என்று கேட்கிறாள். மகள் கேட்பதை எதையும்இல்லை என்று சொல்லாத முருகதாஸ், “சரியம்மா வாங்கித்தருகிறேன்” என்று கூறிவிடுகிறார். கேட்டதைஎல்லாம் வாங்கித்தந்த அப்பா இந்த பங்களா வீட்டையும் வாங்கித் தருவார் என்ற எண்ணத்தில் ஏங்கிக்கொண்டிருக்கிறாள் 7 வயது மகள் பிரித்திக்ஷா. பங்களா வீட்டை வாங்கி தந்தாரா? இல்லையா? என்பதுதான் கதை. தந்தையாக நடித்திருக்கும் முருகதாஸ் நடிப்பின் உச்சத்தை தொட்டிருக்கிறார். மகள்ஆசைப்பட்ட வீட்டை வாங்கி கொடுக்க முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் அவர் அழுகின்றகாட்சியில், நம் கண் தானாக நனைகிறது. படத்தின் உச்சக்கட்ட காட்சியில் மகள் எடுக்கும் முடிவுநம்மை எழுந்து நின்று கைத்தட்ட வைக்கிறது. வலுவான கதையை இலகுவாக படைத்திருக்கும் இயக்குநர் பாராட்டுக்குறியவர்**********