இன்று (20.12.2022) சென்னை, தமிழ்நாடு மின்சாரவாரிய தலைமை அலுவலகத்தில் மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்திரு.வி செந்தில் பாலாஜி அவர்கள் தமிழ்நாடு மின்சாரவாரிய தலைமை அலுவலகத்தில் நடப்பாண்டில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவது குறித்துதமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகதலைமையகத்தில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இக்கூட்டத்தில் அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், அனைத்து மின் பகிர்மான வட்டமேற்பார்வைப் பொறியாளர்கள் காணொளி காட்சிவாயிலாக கலந்து கொண்டனர், இந்த ஆய்வுக்கூட்டத்தின் போது தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும்பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் திரு.ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., மேலாண்மை இயக்குநர் திரு.ரா.மணிவண்ணன், இயக்குநர்/பகிர்மானம் திரு.மா.சிவலிங்கராஜன் மற்றும்தலைமை அலுவலக தலைமைப் பொறியாளர்கள், உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாட்டில் விவசாய உற்பத்தியினை பெருக்கவும், விளை நிலங்களின் பரப்பை அதிகரிக்கவும் மற்றும் விவசாயிகளின் நலனைமேம்படுத்தும் நோக்குடனும் 2022-2023 ஆம் ஆண்டில்50,000 எண்ணிகையிலான புதிய விவசாய மின்இணைப்புகள் வழங்கப்படும் என்று எரிசக்தித் துறைமானிய கோரிக்கையில் தமிழக சட்டப் பேரவையில்அறிவிக்கப்பட்டது.
விவசாயிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றஇத்திட்டமானது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களால் 11.11.2022 அன்று கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. தொடங்கி வைக்கப்பட்ட அன்றே 20,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கானஆணையும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்அவர்களால் வழங்கப்பட்டது.
விழாவில் அறிவித்தபடி, இந்த திட்டம் தொடங்கப்பட்ட 11.11.2022 முதல் 100 நாட்களுக்குள்முழுவதுமாக முடிக்கப்பட்டு 50,000 விவசாயிகளுக்கும்மின் இணைப்பு வழங்கப்பட வேண்டும். இன்று வரை34,134 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள்வழங்கப்பட்டிருக்கின்றன. இன்னும், 15,866 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படவேண்டும்.
சம்பந்தப்பட்ட அனைத்து அலுவலர்களும் இந்தவருடம் மீதமுள்ள 15,866 விவசாய மின்இணைப்புகளை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு, பணிகள் அனைத்தையும் முடித்து எல்லா விவசாய மின்இணைப்புகளும் வெகு விரைவில் வழங்கப்பட வேண்டும் என்று மாண்புமிகு மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.
அனைத்து பொறியாளர்களும் தமக்கான இலக்கினை நிர்ணயித்துக் கொண்டு அதுநிறைவேற்றப்படுகிறதா என தொடர்ந்து ஆய்வுக்கூட்டம் நடத்தி அதனை உறுதிப்படுத்த வேண்டும். இதற்கான கலந்தாய்வு கூட்டம் பிரிவு அலுவலகநிலையில் நடத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.
விவசாய மின் இணைப்புகள் ஒழுங்கான முறையில்விவசாயிகளுக்குத்தான் வழங்கப்படுகின்றதா என்பதைசம்பந்தப்பட்ட மேற்பார்வை பொறியாளர்களும், மண்டல தலைமைப் பொறியாளர்களும் கண்காணிக்கவேண்டும். முன்னுரிமை பதிவில் ஏதேனும் தவறுகள்கண்டுபிடிக்கப்பட்டாலோ அல்லது விவசாயிகளைஇடையூறு செய்வதாக புகார்கள் ஏதேனும் கிடைக்கப்பெற்றாலோ உரிய அலுவலர் மீது துறை ரீதியாககடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்துபணிகளும் வாரிய செலவிலேயே முடிக்கப்படவேண்டும்.
இவ்வாறு மாண்புமிகு மின்துறை அமைச்சர்அவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.
பின்னர், மாண்புமிகு மின்சாரம், மதுவிலக்கு மற்றும்ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம்பேசுகையில்,
அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்இணைப்பு வழங்கப்படும் என்ற இந்த அரசின் தேர்தல்வாக்குறுதியை நிறைவேற்றக்கூடிய வகையில்தமிழகத்தினுடைய முதலமைச்சர் மாண்புமிகு தளபதிஅவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற முதல் ஆண்டிலேயே ஒருலட்சம் விவசாயிகளுக்கான மின் இணைப்புவழங்கக்கூடிய சிறப்பு வாய்ந்த திட்டத்தை தங்களுடையதிருக்கரங்களால் தொடங்கி வைத்து, ஒரு இலட்சமாவதுமின் இணைப்புக்கான உத்தரவினையும் வழங்கினார்கள்.பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விவசாயிகளின் கோரிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்நிறைவேற்றி தந்திருக்கின்றார்கள். அதேபோல, இந்தஆண்டு 50,000 விவசாயிகளுக்கான மின் இணைப்புவழங்கப்படும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர்அவர்களின் வழிகாட்டுதலின்படி சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு கடந்த 11.11.2022 அன்று கரூர்மாவட்டம் அரவக்குறிச்சியில் மாண்புமிகு முதலமைச்சர்அவர்களின் திருக்கரங்களால் 20,000 விவசாயிகளுக்கானமின் இணைப்பு வழங்குவதற்கான உத்தரவு வழங்கப்பட்டது. கடந்த நவம்பர் 11ஆம் தேதி தொடங்கியமின் இணைப்பு வழங்கக்கூடிய பணிகள் மிக விரைவாகஒட்டு மொத்தமாக மின்வாரியத்தினுடைய அனைத்து உயர்அலுவலர்கள் முதல் கடைநிலை பணியாளர்கள் வரைமிகச் சிறப்பாக செயல்பட்டு இதுவரை 34,134 விவசாயிகளுக்கான மின் இணைப்புகள் வழங்கிமுடிக்கப்பட்டுள்ளது. மீதம் இருக்கக்கூடிய 15,866விவசாயிகளுக்கு வருகின்ற ஜனவரி பொங்கல்திருநாளுக்கு முன்பாகவே முழுவதுமாக 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கக்கூடியபணிகளை சிறப்பாக முடிக்கக்கூடிய வகையில் இன்றுஆய்வு கூட்டம் நடந்து முடிந்திருக்கின்றது.
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான தேவையான அளவிற்கு தளவாட பொருட்கள் கையிருப்பில்வைக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு எண்ணோடு, ஆதார்எண்ணை இணைப்பதற்கான இந்த சிறப்பு வாய்ந்தமுயற்சி மின்சார வாரியத்தின் மூலமாக எடுக்கப்பட்டுமொத்தம் 2 கோடியே 67 லட்சம் மின் நுகர்வோர்களுக்குஆதார் எண்ணை இணைக்கக்கூடிய அந்த பணிகள் தொடங்கப்பட்டது. நேற்று வரை ஒரு கோடியே 20 லட்சம் பேர் மின் இணைப்பு எண்ணை, ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர். அதேபோல, ஆன்லைன் மூலமாக 58 இலட்சம் பேர் பதிவு செய்துள்ளனர், பிரிவுஅலுவலகம் உள்ளிட்ட சிறப்பு முகாம்கள் இரண்டையும்சேர்த்து 61 இலட்சம் பேர், ஆக மொத்தம் 1 கோடியே 20 இலட்சம் மின் இணைப்புகள் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்கின்றன. மீதம் உள்ள மின்இணைப்புகளை ஆதாருடன் இணைக்கக்கூடிய பணிகளை இந்த மாத இறுதிக்குள் விரைவாக முடித்துக்கொள்ளுமாறு உங்கள் வாயிலாக மின் நுகர்வோர்களைஅன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
மின் கட்டண உயர்வால் வருவாய் உயர்வு வருடத்திற்கு19,000 கோடி வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,படிப்படியாக சிறு, குறு தொழில் நிறுவனங்கள், கைத்தறி, விசைத்தறி ஆகியவற்றிக்கு மற்றும் சில பிரிவுகளில் மின்கட்டணம் குறைக்கப்பட்டதால் சராசரியாக மாதம் 1,000 கோடி அளவிற்கு தான் கூடுதலாக வருவாய்வந்துக்கொண்டிருக்கிறது. மாண்டஸ் புயலால் மின்வாரியத்திற்கு ஏற்பட்ட இழப்புகள் குறித்து தரவுகள்சேகரிக்கப்பட்டு முழுவதும் கிடைத்தவுடன் அது பற்றியதகவல்கள் தெரியவரும். ஸ்மார்ட் மீட்டர் மற்றும் மின்மாற்றி (DT) மீட்டர் பொறுத்தும் பணிக்கான டெண்டர்ஆயத்த வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு தேர்தல்வாக்குறுதியின்படி மாதம் ஒரு முறை மின் கணக்கீடுசெய்யும் முறை செயல்படுத்தப்படும். மின் வாரியத்தைப்பொறுத்தவரை தேர்தல் வாக்குறுதியில் 20,000 மெகாவாட்அளவிற்கு கூடுதலாக மின் உற்பத்தி செய்வதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதில் 6,000 மெகாவாட் சோலார், 5,000 மெகாவாட்காற்றாலை, 3,000 மெகாவாட் எரிவாயு, 2,000 மெகாவாட்மின் சேமிப்புத்திறன் மற்றும் மீதம் அனல் மின்நிலையத்தில் இருக்கக்கூடிய 6,000 மெகாவாட் மின்உற்பத்திக்கான நிறைவு பெறாத பணிகளும் முடிக்கஉத்தேசிக்கப்பட்டுள்ளது. மின் வாரியம் தொடங்கியநாளில் இருந்து 2021 வரை தமிழ்நாடு மின் வாரியத்தின்சொந்த நிறுவு திறன், தனியார் உட்பட 32,500 மெகாவாட்மட்டுமே தமிழகத்தின் மொத்த நிறுவு திறனாக உள்ளது. அடுத்தப் பத்தாண்டுக்குள் அதாவது, 2030க்குள் மொத்தநிறுவு திறன் தற்போது இருப்பதை விட இரு மடங்காகஅதாவது 65,000 மெகாவாட்டாக உயர்த்துவதற்கானதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்தஆண்டில் 7 கோடி ரூபாய்க்கு சாம்பல் மூலம் வருமானம்வந்தது. ஆனால் தற்போது, 13.71 கோடி வருமானம் கிடைத்திருக்கிறது. வருமானம் இரட்டிப்பு ஆக்கப்பட்டிருக்கிறது. மேலும், 6,600 கோடி ரூபாய்க்குஆர்.இ.சி-யில் வாங்கின கடனிற்கு 13 சதவீதத்திலிருந்து10 சதவீதமாக வட்டி குறைக்கப்பட்டிருக்கிறது. ஒருவருடத்திற்கு 84 கோடி அளவிற்கு வட்டி கட்டுவதிலிருந்துசெலவு குறைக்கப்பட்டுள்ளது. இப்படி மின்சாரவாரியத்தின் ஒவ்வொரு பிரிவையும் மாண்புமிகுமுதலமைச்சர் அவர்கள் கண்காணித்து எந்தெந்தசெலவீனங்கள் கூடுதலாக இருந்தது, அவற்றில் எவைஎவைகளை சீரமைக்கலாம், எந்தெந்த வகைகளில்வருவாயைப் கூடுதலாக்கலாம் என உத்தரவிட்டதைகவனத்தில் கொண்டுதான் மின் வாரியத்தைமேம்படுத்தக்கூடிய சீர்திருத்த நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது, இதன் மூலம் மூன்றுஆண்டுகளுக்குள் நமக்கு வரக்கூடிய வருவாயும், செலவீனங்ககளும் உள்ள இடைவெளி நிச்சயமாககுறைக்கப்படும் என்று தெரிவித்தார்.
பின்னர், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தலைமைஅலுவலகத்தில் செயல்பட்டு வரும் 24 மணி நேரநுகர்வோர் மின் சேவை மையமான மின்னகத்தை ஆய்வுசெய்தார்கள்.