உலக நாயகன் கமல்ஹாசனின் ‘ராஜ்கமல் பிலிம்ஸ்இன்டர்நேஷனல்’ மற்றும் ’சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து திரைப்படம் ஒன்றைத்தயாரிக்க உள்ளன. இது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம்தயாரிக்கும் 51-ஆவது திரைப்படம் ஆகும். இப்படத்தைசோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ், பன்முக நாயகன் கமல்ஹாசன் ,ஆர்.மகேந்திரன் மற்றும் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட்இணைந்து தயாரிக்கவுள்ளனர். இயக்குநர் ராஜ்குமார்பெரியசாமி எழுதி இயக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன்கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகன் பிருத்விராஜ் நடித்த ‘நைன்’ எனும் மலையாளத்திரைப்படம் மூலம் தென்னிந்திய திரையுலகில் கால் பதித்ததுசோனி பிக்சர்ஸ் நிறுவனம். மகேஷ் பாபு நடிப்பில் உருவாகிவரும் ‘மேஜர்’ எனும் திரைப்படத்தின் மூலம் தெலுங்குத்திரையுலகில் அறிமுகமானது. தற்போது, தமிழ் சினிமாவில்ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் உடன் இணைந்துஇன்னும் பெயரிடப்படாத திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 51-ஆவது திரைப்படம் ஆகும். கமல்ஹாசன் மற்றும் ஆர்.மகேந்திரன்தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் இணைந்து நடிக்கும்‘விக்ரம்’ திரைப்படம் இந்த ஆண்டு (2022) கோடைவிடுமுறையில் வெளியாகிறது. ‘விக்ரம்’ திரைப்படம் ராஜ்கமல்நிறுவனத்தின் 50-ஆவது தயாரிப்பு. இந்திய சினிமாவின் இணையற்ற நடிகரும், இப்படத்தின்தயாரிப்பாளருமான கமல்ஹாசன் கூறுகையில், “ஒரு சிறந்ததிரைப்படம் ரசிகர்களிடம் தாக்கத்தை உருவாக்க வேண்டும். இந்தத் திரைப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு புதியஅனுபவத்தை அளிக்கும். சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ்நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிப்பதில்பெருமையடைக்கிறேன்” என்றார்.
சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியாவின் நிர்வாக இயக்குனர்விவேக் கிருஷ்ணானி கூறுகையில், “திரையுலக ஜாம்பவான்கமல்ஹாசனுடன் இணைந்து பணியாற்றுவது சோனி பிக்சர்ஸ்நிறுவனத்திற்கு ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்.ராஜ்குமார் பெரியசாமியின் கதை சொல்லும் திறமையாலும், பெரும் ரசிகக் கூட்டத்தின் மனங்களை ஈர்த்திருக்கும் சிவகார்த்திகேயனின் ஆற்றல்மிகு நடிப்பினாலும் இப்படம்நிச்சயம் பார்வையாளார்களால் கொண்டாடப்படும். தமிழ்சினிமா ரசிகர்களுக்கு இது ஒரு மறக்க முடியாத திரைஅனுபவமாக இருக்கும். தனக்கென தனிச்சிறப்புகள் கொண்டதமிழ்த் திரையுலகில் இத்திரைப்படத்தின் மூலம் கால்பதிப்பதில் சோனி பிக்சர்ஸ் பெருமையடைகிறது. பிராந்தியமொழிகளின் சினிமாச் சூழலை நன்கு அறிந்த, இந்தியசினிமாவில் கணிசமான தாக்கத்தை உருவாக்கிய திரையுலகஆளுமைகளோடும், இளம் தலைமுறைகளோடும் அதிகளவில்எங்கள் பணி தொடருமென நம்புகிறோம்” என்றார். இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி கூறுகையில், “சிறப்பானதும்புதுமையானதுமான கதை அம்சம் கொண்ட இந்தப் படத்தைஇயக்குவதில் பெருமிதம் அடைகிறேன். நான் சிறுவயதில்இருந்தே உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் தீவிரரசிகன். அவர்மீது எனக்கு தனி மரியாதை உண்டு. அவருடையநடிப்பு மற்றும் பன்முக திறமைகளைக் கண்டுவியந்திருக்கிறேன். இந்தப் படத்தில் கதாநாயகனாகநடிக்கும் சிவகார்த்திகேயன் அவர்கள் எனக்கு மிக நெருங்கியநண்பர். இந்தப் படத்தை இயக்குவது என் மனதிற்குப் பிடித்தஒன்று. மிகப் பெரிய தயாரிப்பு நிறுவனங்களான ராஜ்கமல்பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்துபணியாற்றுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார் இப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் கூறுகையில், “இந்தத் திரைப்படத்தில் நடிப்பது என்பது கலவையானபலவித உணர்வுகளை எனக்கு வழங்குகிறது. உலகநாயகன்கமல்ஹாசன் அவர்கள் இந்திய சினிமாவின் தலைசிறந்தகலைஞர். கலைஞானி. சர்வதேசத் திரையுலகில் தமிழ்சினிமாவின் அடையாளமாக வாழ்பவர். கலைமேதைகமல்ஹாசன் அவர்கள் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறேன்என்பதே எனக்குப் பெருமையாகவும் பெரும் மகிழ்ச்சியாகவும்உள்ளது. சர்வதேச அளவில் பல வெற்றிப் படங்களை வழங்கியசோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து பணியாற்றுவதிலும்பெருத்த மகிழ்ச்சி அடைகிறேன். இவை அனைத்தும்சாத்தியமாவதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் என்நண்பர், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அவர்கள்தான். அவருடைய சிறப்பான திரைக்கதையினால் இப்படம்வெற்றியடையும் என் உறுதியாக நம்புகிறேன். என் சினிமாவாழ்க்கையில் இப்படம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்தத் திரைப்படத்தின் ஷூட்டிங் பணிகள் எப்போதுதொடங்கும் என ஆவலோடு இருக்கிறேன்” என்றார். இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தகவல் மற்றும் முழுவிவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா: சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் மோஷன் பிக்சர்குழுமத்தின் கீழ் இயங்கும், உள்ளூர் மொழிகளில் திரைப்படம்தயாரிக்கும் நிறுவனமே, சோனி பிக்சர்ஸ் இன்டர்நேஷனல்புரொடக்ஷன்ஸ். உலகின் பல பகுதிகளில் (ஜெர்மனி, ஃப்ரான்ஸ், ஸ்பெயின், ஐரோப்பா, ரஷ்யா, கொரியா, சீனா, ஜப்பான், இந்தியா, மெக்சிகோ, பிரேசில் மற்றும் தைவான்) ஆண்டுக்கு 30 படங்களை இந்நிறுவனம் வெளியிட்டுவருகிறது. சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட்: சோனி பிக்சர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்டோக்கியோவை மையமாகக் கொண்ட சோனி கார்ப்பரேஷன்குழுமத்தின் கிளை. உலக அளவில் மோஷன் பிக்சர்ஸ்தயாரிப்பு, திரைப்படங்களின் உரிமையைப் பெறுதல் மற்றும்விநியோகம் செய்தல் ஆகிய பணிகளை மேற்கொள்கிறது. தொலைக்காட்சித் தயாரிப்பு, உரிமை மற்றும் விநியோகம், தொலைக்காட்சி நெட்வொர்க்குகள், டிஜிட்டல் கன்டென்ட்உருவாக்கம் மற்றும் விநியோகம்; படப்பிடிப்பு வசதிகள், புதியபொழுதுபோக்கு தயாரிப்புகள், சேவைகள் மற்றும்தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஆகியவையும்இந்நிறுவனத்தின் பணிகளில் அடங்கும். சோனி பிக்சர்ஸ் டெலிவிஷன் உலகம் முழுவதிலும்சொந்தமாகவும், பங்குதாரர்களோடு இணைந்தும் நடத்தும் பல தயாரிப்பு நிறுவனங்களைக் கொண்டுள்ளது. கொலம்பியா பிக்சர்ஸ், ஸ்கிரீன் ஜெம்ஸ், ட்ரைஸ்டார் பிக்சர்ஸ், 3000 பிக்சர்ஸ், சோனி பிக்சர்ஸ் அனிமேஷன், ஸ்டேஜ் 6 பிக்சர்ஸ், AFFIRM பிலிம்ஸ், சோனி பிக்சர்ஸ்இன்டர்நேஷனல் புரொடக்ஷன்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ்க்ளாசிக்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களை உள்ளடக்கியதுமோஷன் பிக்சர் குழுமம்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்: ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் 1981 ஆம் ஆண்டில்தொடங்கப்பட்ட திரைப்படத் தயாரிப்பு நிறுவனம். தலைசிறந்த படைப்பான ‘ராஜ பார்வை’ படம் இதன் முதல்தயாரிப்பு. 40 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தைக்கொண்ட மிகச் சில திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில்ஒன்றாக இருக்கிறது. ’அபூர்வ சகோதரர்கள் ’ , ’சத்யா’, ’தேவர்மகன்’,’குருதிப்புனல்’ மற்றும் விமர்சன ரீதியாக சர்வதேச அளவில்பாராட்டப்பட்ட ’ஹே ராம்’, ’விருமாண்டி’ மற்றும் ’விஸ்வரூபம்’ கலாட்டா கதையான ’சதி லீலாவதி’, என அனைத்துப்பிரிவுகளிலும் சிறந்த திரைப்படங்களைத் தயாரித்துள்ளது. இந்தியத் திரை உலகிற்குப் பல புதிய தொழில்நுட்பங்களைஅறிமுகம் செய்ததில் ராஜ்கமல் பிலிம்ஸ்தான் முன்னோடி. ‘குருதிப்புனல்’ திரைப்படத்தில் டால்பி ஸ்டீரியோ ஒலியைஅறிமுகப்படுத்தியது, விஸ்வரூபத்தில் ஆரோ 3டி (Auro 3D) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது என உலக அளவிலானதொழில்நுட்பங்களை இந்திய மற்றும் தமிழ் சினிமாவிற்குஅறிமுகம் செய்த பெருமை ராஜ்கமல் பிலிம்ஸையே சேரும். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ்இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி மற்றும் ஃபகத்ஃபாசில் ஆகியோர் இணைந்து நடித்துள்ள, அனைவராலும்பெரிதும் எதிர்பார்க்கப்படும் விக்ரம் திரைப்படம் இந்த ஆண்டு(2022 ) கோடையில் வெளியிடப்பட உள்ளது.