ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சி, மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் குறித்து அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக இயக்குநர் ஜெசிந்தாலாசரஸ், இ.ஆ.ப., 11.08.2021 அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ.யு.சந்திரகலா.இ.ஆ.ப., உடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலின்படி அகதிகள் முகாம்களில் வாழ்கின்ற தமிழர்களுடைய துறை வாரியாக ஆய்வு நடத்தினார்கள். இலங்கைத் தமிழர்கள் தன்மானத்தோடு வாழ்வதற்கு அவர்களுக்கு தண்ணீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, வீட்டு; வசதிகள் மற்றும் என்னென்ன அடிப்படை வசதிகள்; தேவைப்படுகிறது. மேலும் அகதிகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் பணிகள் மற்றும் மாதாந்திர உதவித்தொகை வழங்கும் பணிகளையும் ஆய்வு செய்து அகதிகளிடம் குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் 400 குடும்பங்கள் 1400 நபர்கள் வசிக்கின்றனர்;. அகதிகள் முகாம்களில் உள்ள பள்ளிக்குழந்தைகளுக்காக கல்வி தொலைக்காட்சி காண்பதற்காக தொலைக்காட்சிப் பொட்டி அமைக்கப்படும் எனவும், முகாம்களில் உள்ளவர்கள் ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சி, மண்டபம் இலங்கை அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள் குறித்து அகதிகள் மறுவாழ்வு மற்றும் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள் நல ஆணையரக இயக்குநர் திருமதி.ஜெசிந்தாலாசரஸ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.08.2021) மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா.இ.ஆ.ப., அவர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்வுகளின் போது, கூடுதல் ஆட்சியர்ஃமாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.கே.ஜே.பிரவீன் குமார்,இ.ஆ.ப., அவர்கள், தனித்துணை ஆட்சியர் மண்டபம் முகாம் திருமதி.சிவ.சிவக்குமாரி, அவர்கள், இராமநாதபுரம் வட்டாட்சியர் திரு.வீ.ரவிச்சந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.