இராமநாதபுரம் அரசு மகளிர் கலைக்கல்லூரி வளாகத்தில் (29.12.2023) தமிழ்வளர்ச்சித் துறையின்மூலம் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட வார விழாவிற்கான விழிப்புணர்வுப் பேரணி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., தலைமையேற்று விழிப்புணர்வுப் பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து பொதுமக்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும்தமிழ் ஆட்சி மொழியின் சட்டத்தின் சிறப்புகள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கி தெரிவிக்கையில், தமிழ் ஆட்சி மொழியின் சட்டம் 27.12.1956 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும்இன்றைய தினம் தமிழ் ஆட்சிமொழிச் சட்ட தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் அனைத்துஅலுவலகங்கள் மற்றும் வணிக நிறுவனங்களில் தமிழ் மொழியை முழுமையாக பயன்படுத்த வேண்டும். தொன்மை வாய்ந்த தமிழ் மொழியின் பாதுகாப்பு தங்களின் பங்களிப்பும் முழுமையாக இருந்திட வேண்டும்என்பதே ஆகும். அந்த வகையில் தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் ஒரு வார காலத்திற்கு சட்ட வார விழாநிகழ்ச்சி நடத்தி பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெறுகின்றன. எனவேஅனைவரும் தமிழ் மொழியில் கோப்புகள் பராமரிப்பதும், வணிக நிறுவனங்களில் தமிழ் மொழியில் பெயர்பலகைகள் உள்ளிட்டவற்றை செயல்படுத்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணுசந்திரன்,இ.ஆ.ப., தெரிவித்தார்.
அரசு மகளிர் கலை கல்லூரி மாணவிகள் மற்றும் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரி மாணவிகள்உள்ளிட்ட சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று தமிழ் மொழியின் சிறப்புகள் குறித்த பதாகைகள்ஏந்தி பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வகையில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று பேரணிநிறைவாக அரண்மனை பகுதியை வந்தடைந்தது.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சிவராமன், இ.கா.ப., அவர்கள், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் திருமதி.சபீர் பானு அவர்கள், அரசு மகளிர் கலைக் கல்லூரி பேராசிரியர் கீதாமாணிக் நாச்சியார் முகமது சதக் தஸ்தகீர் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் சோமசுந்தரம் மற்றும் பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.