ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பேருந்து நிலையத்தில் (29.01.2024) தமிழ்நாடு அரசுபோக்குவரத்துக் கழகம் மூலம் புதிய வழித்தட பேருந்து இயக்கம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., முன்னிலை வகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் புதிய வழித்தடத்திற்கான புதிய பேருந்தை கொடிசைத்து துவக்கி வைத்துதெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களைசெயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பொதுமக்களுக்கு தேவையான திட்டங்களை மாவட்டநிர்வாகத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கமுதி, முதுகுளத்தூர், சாயல்குடி பகுதிகளில்இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வர ஏதுவாக நேரடி பஸ் வசதி வேண்டிகோரிக்கைகளை முன்வைத்ததன் அடிப்படையில் இன்று முதல் புதிய பேருந்து கமுதியிலிருந்து, சாயல்குடி வழியாக சிக்கல், தேரிருவேலி, வளநாடு, சத்திரக்குடி, இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்அலுவலகம் வரை நாள்தோறும் நான்கு முறை சென்று வரும் வகையில் புதிய வழித்தடத்தில் இப்பேருந்துஇயங்கும். இதன் மூலம் இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும், அரசு துறையில் பணியாற்றும்பணியாளர்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மிக பயனுள்ளதாகஇருக்கும். இதுபோல் மக்களின் தேவைக்கேற்ப மற்ற இடங்களிலும் பேருந்து வசதிகள் மேம்படுத்திதரப்படும் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர்ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் செ.முருகேசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகபொது மேலாளர் சிங்காரவேலன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர்கள் நாகராஜன், பத்மகுமார், மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர்; வி.வேலுச்சாமி, முதுகுளத்தூர் பேரூராட்சி தலைவர் அ.ஷாஜஹான் மற்றும் அரசு அலுவலர்கள் உட்படபலர் கலந்து கொண்டனர்.