ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (23.08.2024) தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்  சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., தமிழ்நாடு விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித்துறையின் மூலம் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கட்டுரைப்போட்டி நடத்தப்பட்டு அதில் முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10,000ஃ-, ரூ.7,000ஃ-, ரூ.5,000ஃ- வீதம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச்சான்றினை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் பேச்சுப்போட்டியில் ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துவரும் 9-ஆம் வகுப்பு மாணவர் இசக்கிராஜா அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000ஃ- ம், பாராட்டுச்சான்றும். இராமநாதபுரம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் சத்தீஸ்வரி அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.7,000ஃ-ம், பாராட்டுச்சான்றும். கீழக்கரை ஹமீதியா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் செ.மரியம்பீவி அவர்களுக்கு மூன்றாம் பரிசாக ரூ.5,000ஃ-ம், பாராட்டுச்சான்றும்.மேலும் கட்டுரைப்போட்டியில் பரமக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் கனிஷ்கா அவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10,000ஃ-ம், பாராட்டுச்சான்றும். கொழுந்துரை தி.கிரெசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படிக்கும் தாஜ{ல்ஹசன் அவர்களுக்கு இரண்டாம் பரிசாக ரூ.7,000ஃ-ம், பாராட்டுச்சான்றும். தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மீகாஸ்னோபி அவர்களுக்கு மூன்றாம் பரிசாக ரூ.5,000ஃ-ம், பாராட்டுச்சான்றும் வழங்கி பாராட்டப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர்  சபீர்பானு மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.