கோ-ஆப்டெக்ஸ்ஸின் தீபாவளிக்கான 30% சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து நெசவாளர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருந்து நடப்பாண்டில் இழக்கீடு ரூ.72 இலட்சம் எய்திட பொதுமக்கள் அனைவரும் உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., வேண்டுகோள்

இராமநாதபுரத்தில் இன்று (27.09.2024) கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் மூலம் தீபாவளி பண்டிகைக்கான 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., தலைமையேற்று குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்பு தள்ளுபடி விற்பனையை துவக்கி வைத்து முதல் விற்பனைக்கான ஆடைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி தெரிவிக்கையில், “கோ-ஆப்டெக்ஸ்; என அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவு சங்கம் , 1935 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டு தொடர்ந்து 89 ஆண்டுகளாக தமிழ்நாட்டிலுள்ள கைத்தறி தெசவாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும்  சிறப்பான முறையில் சேவை புரிந்து வருகிறது. இந்தியாவிலுள்ள கைத்தறி நிறுவனங்களிலேயே முதன்மை நிறுவனமாக கோ-ஆப்டெக்ஸ் திகழ்வதற்கு நெசவாளர்களின் ஒத்துழைப்பும், வாடிக்கையாளர்களின் பேராதரவும் தான் முக்கிய காரணம் ஆகும். கைத்தறி இரகங்களின் விற்பனையை அதிகரிக்க தமிழக அரசு ஆண்டு தோறும் பண்டிகை காலங்களில் 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கி வருகிறது. எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டு, பருத்தி கைத்தறி ரகங்களுக்கு 30மூ சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பண்டிகையை முன்னிட்டு பல வண்ணங்களில் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் பலவித வடிவமைப்புகளில் மென் பட்டு சேலைகள், பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், மற்றும் நவீன காலத்திற்கு உகந்த இரகங்கள் தீபாவளி பண்டிகைக்காக தருவிக்கப்பட்டுள்ளது .

தற்போது உடல்நலத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் ஏற்ப இரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பருத்தி ஆடைகள், காஞ்சிபுரம், ஆரணி, சேலம், திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை மென்பட்டு சேலைகள், பட்டு வேட்டிகள், கைத்தறி சுங்குடி சேலைகள், காஞ்சி காட்டன், செட்டிநாடு காட்;டன், கோவை கோரா காட்டன், சேலம் காட்டன், பரமக்குடி காட்டன், திண்டுக்கல் காட்டன் மற்றும் அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள் புதிய வடிவில் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன. மேலும் நவீன யுக ஆடவர்களை கவரும் விதமாக காட்டன் சட்டை இரகங்கள் பருத்தி சட்டைகள் லுங்கிகள் மற்றும் வேட்டிகள் உள்ளன. மகளிருக்கான சுடிதார் இரகங்கள், நைட்டிகள் மற்றும் குர்தீஸ்கள் கண்ணைக் கவரும் வண்ணங்களில் வாடிக்கையாளர்களுக்காக தருவிக்கப்பட்டுள்ளது. கோ-ஆப்டெக்ஸ் ஜவுளி இரகங்களை மின் வணிக வலைதளமான றறற.உழழிவநஒ.பழஎ.ைெ என்ற இணையதள தளத்தின் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். கோ-ஆப்டெக்ஸில் மாதாந்திர சேமிப்பு திட்டமும் நடைமுறையில் உள்ளது. இராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு இலக்கீடை விட அதிகளவு விற்பனை செய்து சாதனை படைக்கப்பட்டது போல் நடப்பாண்டில் ரூ.72 இலட்சத்திற்கு இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைவிட கூடுதலாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு பெருமை சேர்த்திடும் வகையில் பொதுமக்கள், அரசு துறையினர்கள், தனியார் நிறுவன பணியாளர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்து உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப., தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல மேலாளர் (கூஃபொ) திரு.செந்திவேல், மேலாளர் பாண்டியம்மாள, இராமநாதபுரம் நகர்மன்ற உறுப்பினர் இந்திரா மேரி செல்வம மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.