ராமநாதபுரத்தில் சிறப்பு மருத்துவ முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் கடம்பனேந்தல் கிராமத்தில் பொதுசுகாதார துறையின் மூலம் நடமாடும் மருத்துவக்குழு மூலம் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்இ.ஆ.ப. பார்வையிட்டு ஆய்வு செய்து தெரிவிக்கையில். மழைக்காலம் துவங்கியதையொட்டி வைரஸ் காய்ச்சல் பொதுமக்களை பாதிக்காத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் வட்டார மருத்துவர்கள் தலைமையில்; நடமாடும் மருத்துவக் குழு செயல்பட்டு வருகின்றனர் கிராமப்பகுதிகளில் நடைபெறும் மருத்துவ முகாமில் காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள்; பரிசோதனை செய்து உரிய சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும் இம்முகாமில் இரத்தப் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன் உயர் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு அரசு தலைமை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடா;ந்து பொதுசுகாதார துறையின் மூலம் ஒவ்வொரு வட்டத்திலும் நாள்தோறும் நடமாடும் மருத்துவக்குழு கிராமங்களில் முகாமிட்டு காய்ச்சல் தடுப்பிற்கான மருத்துவ பரிசோதனை சிறப்பு முகாம் மேற்கொண்டு வருவார்கள். ஒவ்வொரு கிராமத்திலும் நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்கள் பங்கு கொண்டு உரிய மருத்துவ பரிசோதனை செய்துகொண்டு வைரஸ் காய்ச்சல் தாக்காத வகையில் பாதுகாப்புடன் இருந்திட வேண்டும். அதுமட்டுமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெண்ணீர் பயன்படுத்த வேண்டும். அதேபோல் காய்ச்சல் போன்ற அறிகுறி வந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றிட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன்,இ.ஆ.ப. தெரிவித்தார்