ராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,இ.ஆ.ப., முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாபெரும் சிறப்பு மருத்துவ முகாமை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் ஆர்.கே.கார்மேகம் முன்னிலை வகித்தார்.

முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்தில்பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில்இராமநாதபுரம் நகராட்சி மற்றும் பொதுசுகாதாரத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு மருத்துவமுகாம் நடை பெற்றது. இந்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், மகளிர் நலம், குழந்தைகள் நலம், அறுவைசிகிச்சை மருத்துவம், தோல் சிகிச்சை, சித்த மருத்துவம், பல் மருத்துவம், தொடர்பானவைகளுக்குபொதுமக்கள் சிகிச்சை அளித்திடும் வகையில் முகாம்கள் நடைபெறுகிறது. இந்த முகாமில் மேல்சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்படுகின்றது. எனவே பொதுமக்கள் இதுபோன்றுநடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணுசந்திரன்,..., தெரிவித்தார்;.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பா.விஷ்ணு சந்திரன்,..., வள்ளல் பாரி நகராட்சிநடுநிலைப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் நகர்நல அலுவலர் மரு.இரத்தினகுமார், இராமநாதபுரம் வட்டாட்சியர் ஸ்ரீதரன் மாணிக்கம்  மற்றும் அரசுஅலுவலர்கள் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.