“ரணம் அறம் தவறேல்” திரைப்பட விமர்சனம்

சென்னை,பிப்.25- முத்து நாகராஜன் தயாரிப்பில் ஷெரீப் இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேதா, தான்யாஹோப், நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்ரணம் அறம் தவறேல்“. மனித உடல் பாகங்களைஎரிந்த நிலையில் காவல்த்துறையினர் கண்டெடுக்கிறார்கள். அது யாருடைய உடல் உறுப்புக்கள்?. ஏன்துண்டுதுண்டாக வெட்டி எரித்து கொல்லப்படுகிறார்கள்?  கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிக்க துப்பறிவதுதான் படத்தின் கதை. பழிதீர்க்கும் பழையை கதையை புதிய கோணத்தில் சொல்லியிரிக்கிறார்இயக்குநர் ஷெரீப். சிதைந்த முகங்கள் யாருடையது என்பதை துள்ளியமாக காவல்த்துறைக்கு வரைந்துகாட்டும் நிபுணராகவும், துப்பறிவாளராகவும் நடித்துள்ளார் வைபவ். கலகலப்பான வைபவை இப்படத்தில்காணமுடியவில்லை. மந்திரச்சிவிட்ட கோழியைப்போல இறுகிய முகத்துடன் தனது கதாபாத்திரத்தைநன்றாக உள்வாங்கி நடித்துள்ளார். படமுழுக்க அதிரடி திருப்பங்களோடு சலிப்புத்தட்டாம்ல் திரைக்கதைசெல்கிறது. ஆய்வாளராக வரும் தான்யாஹோப் சாவி கொடுத்த மொம்மைபோல ஒரே முகபாவத்துடன்நடித்துள்ளார். நந்திதா ஸ்வேதாவின் நடிப்பு பாராட்டும்படியுள்ளது.  பின்னணி இசைதான் இப்படத்தைதூக்கி நிறுத்துகிறது. பிணத்தோடு உறவாடும் மனிதக் கழுகுகளை மையப்படுத்தி வெளிவந்திருக்கும்படம் ரணம்.

————–