ராதாகிருஷ்ண பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்து வெளிவந்திருக்கும் படம் “டீன்ஸ்”. 13 சிறுவர்களை நடிக்க வைத்து அமானுஷ்யத்துக்குள்ளும் அறிவியலுக்குள்ளும் புகுந்து விளையாடியிருக்கிறார் பார்த்தீபன். மிகமிக குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம் பார்வையாளர்களுக்கு மனநிறைவை தந்திருக்கிறது. பாடசாலையில் பயிலும் 13 சிறுவர் சிறுமிகள் ஒன்று சேர்ந்து பாடசாசாலைக்கு செல்லாமல் விளையாட்டுத்தனமாக காட்டுக்குள் செல்கிறார்கள். அங்கே சில் அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கின்றன. ஒருவர் பின் ஒருவராக தொலைந்து போகிறார்கள். அவர்கள் கிடைத்தார்களா? இல்லையா? என்பதுதான் மீதிக்கதை. திரைத்துறையில் பலப்பல புதிய யுத்திகளை கையாளுவது பார்த்திபனுக்கு கைவந்த கலை. அதற்கு டீன்ஸ் படம் ஒரு உதாரணமாக உள்ளது. பார்த்திபன் இயக்கிய படங்கள் வணிக ரீதியில் வெற்றிபெறாவிட்டாலும் அவரது கருத்து கருவூலம் நிறைந்தேயிருக்கும். தமிழ் சிறுவர்களின் ஆங்கில உரையாடல் அதிகம். மொழி அழிந்துவிட்டால் இனம் அழிந்துபோகும் என்பதை பார்த்தீபன் உணரவேண்டும். ஊஞ்சலாட்டத்திலிருக்கும் யோகிபாபு இப்படத்தில் ஊசலாடுகிறார். இமானின் இசை படத்திற்கு பக்கபலமாக துணை செய்கிறது.******