வடிவேலுவை நடிக மன்னனாக்கிய படம் ‘மாமன்னன்’

ரெட் மூவிஸ் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பஹத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்மாமன்னன்‘. பட்டியிலனத்தை சேர்ந்தவர் வடிவேலு. அவரது மகன் உதயநிதி ஸ்டாலின் பன்றிகளை வளர்க்கிறார். உயர் குலத்தை சேர்ந்தவர் பஹத் பாசில்நாய்களை வளர்க்கிறார். பஹத் பாசில் ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர். வடிவேலு அந்த கட்சியின்எம் எல் . கீழ் சாதி என்பதால் வடிவேலுவை நிற்க வைத்து பேசுகிறார் பஹத் பாசில். இதனால் பஹத்பாசிலை அடித்துவிடுகிறார் உதயநிதி ஸ்டாலின். முடிவு என்ன ஆனது என்பதுதான் கதை. இபடத்தின்உண்மை கதாநாயகன் வடிவேலுதான். நகைச்சுவை நடிகராக ரசிக்க வைத்த வடிவேலு குணசித்திரநடிகராக பரிணாமம் பெற்று இருக்கிறார். அவரது உடல்மொழி ரசிகர்களை கைத்தட்ட வைக்கிறது. வடிவேலுவின் ஒவ்வொரு காட்சியும் பிரமிக்க வைக்கிறது. இவ்வளவு திறைமைகளை உள்ளடக்கி வைத்து கொண்டு ஒரு நகைச்சுவை நடிகனாக மட்டும் இத்தனை காலம் உலாவியிருக்கிறார். தீண்டாமை என்பது நகரங்களில் செத்த பாம்பாகிவிட்டது. அதற்கு உயிர் கொடுக்க முயல்வது ஆபத்தானது என்பதை இயக்குநர்களும் கதாசிரியர்களும் உணரவேண்டும். உதயநிதி ஸ்டாலினின் உணர்ச்சி மிகுந்த நடிப்பு படத்தின் வெற்றிக்கு அதிக வலு சேர்க்கிறது.