ரெட் ஜெயன்ட் மூவீஸ் தயாரிப்பில், இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “காதலிக்க நேரமில்லை”. பொங்கல் கொண்டாட்டமாக ஜனவரி 14 அன்று இப்படம் திரைக்கு வருகிறது. இவர்களுடன் நடிகர்கள் வினய், யோகிபாபு, T J பானு, லால், ஜான் கொகேய்ன், லட்சுமி ராமகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் அறிமுக நிகழ்வில் நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது: “படத்தில் நித்யா மேனன் பேருக்குப் பிறகு ஏன் உங்கள் பெயர் எனக் கேட்டார்கள், என் மீதான நம்பிக்கைதான். ஏன் கூடாது திரை வாழ்க்கையில் நிறைய விசயங்களை உடைத்துள்ளேன் இது மட்டும் ஏன் கூடாது. ஷாருக்கான் சார் பார்த்துத் தான் இந்த முடிவை எடுத்தேன். பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை அவர்கள் இல்லாமல் நாம் இல்லை இனி பெண் இயக்குநர்கள் படத்தில் இதை பின்பற்ற செய்வேன். எனக்கு மிக கஷ்டமான காலம் இருந்தது, நான் நடித்த படங்கள் ஓடவில்லை, நான் என்ன தப்பு செய்தேன் என யோசித்தேன். என் மீது தவறு இல்லாதபோது ஏன் துவண்டு போக வேண்டும் எனத் தோன்றியது. அடுத்த வருடமே என் மூன்று படம் வெற்றி. துவண்டு போவது தோல்வியில்லை, விழுந்தால் எழாமல் இருப்பது தான் தோல்வி. நான் கண்டிப்பாக இந்த வருடம் மீண்டு வருவேன்.********
அடுத்தடுத்து மிக நல்ல வரிசையில் படம் செய்து வருகிறேன். காதலிக்க நேரமில்லை, பாலசந்தர் சார் தன்னுடைய படங்களில் பல விசயங்களை சர்வசாதாரணமாக உடைத்திருப்பார். அதே போல் ஜென் ஜி தலைமுறையில் கிருத்திகா அதைச் செய்துள்ளார். இது யூஏ சர்டிபிகேட் படம் அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்த்து, ரசியுங்கள் நன்றி.
இயக்குநர் கிருத்திகா உதயநிதி பேசியதாவது… மீடியா நண்பர்கள் எனக்கு எப்போதும் ஆதரவு தந்துள்ளீர்கள், இந்த படத்திற்கும் ஆதரவு தாருங்கள். ஜெயம் ரவியிடம் முதன் முதலில் கதை சொன்ன போது, நார்மலாகவே எல்லா ஹீரோக்களும் கதை சொன்னால், எத்தனை கன்ஸ் வரும், எத்தனை கத்தி, எத்தனை சண்டை வரும் எனக் கேட்பார்கள், ஆக்சன் பட ஹீரோக்கள் மற்ற ஜானர் படம் பண்ணத் தயங்குவார்கள், நான் நம் படத்தில் ஒரு சின்ன கத்தி கூட இல்லை என்று சொன்னேன். ஆனால் நான் செய்கிறேன் என்று என்னை நம்பி வந்தார். எந்த இடத்திலும் அவர் யோசிக்கவே இல்லை. மிக அருமையாக நடித்துள்ளார். அவர் என்னை பாலசந்தர் சாருடன் ஒப்பிட்டது ரொம்ப கூச்சமாக உள்ளது. நான் அவரின் பெரிய ஃபேன், அவருடன் ஒப்பிட்டது மகிழ்ச்சி. நித்யாமேனன் அவர் எப்போதும் ரொம்ப செலெக்ட்டிவாக, கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த கதையைச் சொல்வதற்கு முன்னே, கொஞ்சம் தயங்கினேன். அவர் ஒத்துக் கொள்வாரா இல்லையா? என்ற தயக்கம் இருந்தது. ஆனால் அவர் கேட்டவுடன் நான் செய்கிறேன் என்றார். மிக அட்டகாசமாக நடித்திருக்கிறார். வினய் இந்த கேரக்டர் பற்றிச் சொன்ன போது, நான் செட்டாவேனா? எனத் தயங்கினார், ஆனால் சிறப்பாகச் செய்துள்ளார். பானு சின்ன கேரக்டர் தான், அவர் முதலில் ஒத்துக்கொள்ளவில்லை, என் டீம் வேறு பலரைக் காட்டினார்கள், ஆனால் எனக்கு யாரும் செட்டாகவில்லை கடைசி வரை பானு தான் என் மனதில் இருந்தார். அவர் நான் விட மாட்டேன், என நடிக்க ஒத்துக்கொண்டார். யோகிபாபு வந்தாலே ஷூட்டிங்க் ஸ்பாட் ஜாலியாக இருக்கும். யோகிபாபு இல்லாமல் தமிழ் படம் எடுக்க முடியாது, அவரும் சின்ன ரோல் செய்துள்ளார். இந்தப்படம் விஷுவலாக நன்றாக இருக்கக் காரணம் கேவ்மிக் தான் அத்தனை உழைத்துள்ளார், எடிட்டிங்கில் கிஷோர் நிறையச் செய்துள்ளார். நானும் அவரும் எடிட்டிங்க் டேபிளில் தான் சினிமா நிறையக் கற்றுக்கொண்டோம். ஏ ஆர் ரஹ்மான் சார் பற்றி சொல்ல நிறைய இருக்கிறது. மியூசிக்கில் கரக்சன் எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்பார், அவர் இசையைப் பற்றி எப்படி கருத்துச் சொல்ல முடியும், அவர் ஒரு லெஜெண்ட் என்பது அவரே உணராமல் இருக்கிறார். தயாரிப்பு, என் சொந்த தயாரிப்பு எனப் பலரும் நினைத்துக் கொள்கிறார்கள், ஆனால் ஒவ்வொன்றிற்கும் நான் கணக்கு சொல்ல வேண்டும், நான் தயாரிப்பாளர் ஃப்ரண்ட்லி இயக்குநர். இப்படம் என் கனவு நனவானதாக அமைந்துள்ளது, உங்கள் அனைவருக்கும் பிடிக்குமென நம்புகிறேன் நன்றி.
ரெட் ஜெயன்ட் மூவீஸ் சார்பில் அர்ஜூன் துரை பேசியதாவது…. 9iகாதலிக்க நேரமில்லை ஜனவரி 14 ரிலீஸாகிறது. ஜெயம் ரவி சார் நீண்ட காலம் கழித்து திரையில் ரொமான்ஸ் செய்துள்ளார். பார்க்க மிக நன்றாக உள்ளது. நித்யா மேனன் ரொம்ப செலக்டிவாக தான் கதாப்பாத்திரங்கள் செய்கிறார். திருச்சிற்றம்பலம் படத்திற்குப் பிறகு, இந்தப்படம் மிக முக்கியமானதாக இருக்கும். ஜெயம் ரவி, நித்யா மேனன் ஜோடி உங்களைக் கவர்வார்கள். வினய் மிக வித்தியாசமான ரோல் செய்துள்ளார். அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். கிருத்திகா எல்லோரும் பார்த்து ரசிக்கும்படி அருமையான ரொமான்ஸ் படம் தந்துள்ளார். அனைவரும் படம் பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி.