ரீல்பேட்டை தயாரிப்பில் சுனில்தேவ் இயக்கத்தில் எஸ்.பி.சித்தார்த், சைத்தினியா பிரதாப், அருண்பாண்டியன் ஆகியோரின் நடிப்பில் உருவானபடம் ‘அதோமுகம்‘. கதாநாயகன் எஸ்.பி.சித்தாரத்தை பல வழிகளில் கொலை செய்ய முயற்சி நடக்கிறது. ஏன் அவரை கொலை செய்யமுயற்சிக்கிறார்கள். அவரை கொலை செய்ய பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் என்பதை யாரும்எதிபார்க்காத கதைக்களமாக உருவாக்கியிருக்கிறார்கள். அறிமுக கதாநாயகன் எஸ்.பி. சித்தார்த்அமைதியாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளார். லட்சணமான முகத்துடன் காணப்படும் கதாநாயகிசைத்தினியா பிரதாபின் உச்சக்கட்ட காட்சியில் யாரும் நம்பமுடியாதளவுக்கு தனது நடிப்பைவெளிப்படுத்தியுள்ளார். பார்வையாளர்களுக்கு சலிப்புதட்டாமல் திரைக்கதை செல்கிறது. அடுத்தகட்டத்தை ஆர்வமுடன் எதிர்பார்க்க வைக்கிறது. சிறைக்குள் அருண்பாண்டியனுக்கு இருக்கும்வசதிகள் நம்பமுடிவதாக இல்லை. திரைக்கதை இலக்கணம் பார்ப்பதில்லைதானே….