கடிவாளம் இல்லாத குதிரை ‘ரெஜினா’ திரைக்கதை

எல்லோ பியர் புரடெக்‌ஷன் தயாரிப்பில் டொமின் டிசில்வா இயக்கத்தில் சுனைனா, நிவாஸ் ஆதித்தன்நடிப்பில் வெளிவந்திருக்கும் படம்ரெஜினா‘. தந்தையையும் கணவனையும் கொலை செய்தவனை பழிதீர்க்க புறப்பட்ட மலைவாழ்யினப் பெண்ணின் கதை. தாய் இல்லாத சுனைனா சிறுவயதாகைஇருக்கும்போது அவளின் கண்முன்னே தந்தை கொல்லப்படுகிறார். அனாதையாக வாழ்ந்த சுனைனாபெரியவளாக வளர்ந்ததும் நிவாஸ் ஆதித்தனை காதலித்து திருமணம் செய்து கொண்டு நிம்மதியாகவாழ்ந்து வருகிறார். வங்கிக் கொள்ளையில் கணவர் நிவாஸ் ஆதித்தனும் கொல்லப்படுகிறார். புகார்கொடுக்க சென்ற சுனைனாவை காவலர்களும் அவமானப்படுத்தி அனுப்புகிறார்கள். தானேகொலையாளியை கண்டுபிடித்து பழிவாங்க புறப்படும் படலம்தான் கதை. சுனைனாவின் சாதூர்யமானநடிப்பு அனைவரையும் கவர்கிறது. சொல்லவந்ததை சொல்லத் தெரியாமல் திணறியிருக்கிறார்இயக்குநர். கதையின் கருப்பொருளோடு திரைக்கதை ஒட்டவில்லை. கடிவாளமில்லாத குதிரைஓடுபாதையைவிட்டுவிட்டு எங்கெங்கோ ஓடுவதைப்போல் திரைக்கதை ஓடுகிறது.