கதாநாயகர்களுக்கு 60% சம்பளம் கொடுக்கும் அவலம் – கே.ராஜன்

ஆர்.எப்.ஐ. பிலிம்ஸ் ரெஹான் அஹமத் தயாரிப்பில், இயக்குநர் வி.ஆர்.ஆர்.இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “கெத்துல”* இப்படத்தின் இசைத்தட்டு விழாவில் பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் பேசுகையில், சிறு முதலீட்டு படங்கள் வெற்றி பெற்றால் திரையுலகம் வளரும், தொழிலாளர்கள் வாழ்வார்கள். கெத்துல கெத்தாக இருக்கிறது. இந்தக்குழு வெற்றி பெற்றால் மீண்டும் படம் தான் எடுப்பார்கள். தயாரிப்பாளர் மிகுந்த நல்ல குணம் படைத்தவர். நல்லதொரு ஆக்ஷன் படமாக இது உருவாகியுள்ளது. இந்தப்படம் வெற்றி பெற வாழ்த்துகள். தமிழ் நாட்டில் ஹீரோக்களுக்கு 60 சதவீதம் சம்பளம் கொடுக்கும் அவலம் இருக்கிறது. இது தீர வேண்டும். இப்படி எடுத்தால் எப்படி ஓடும். தயாரிப்பாளரை வாழ வைக்காவிட்டால் சினிமா வாழாது. இந்தப்படம் போல் சின்ன படங்கள் ஓட வேண்டும், வாழ்த்துகள் என்றார்.*********

இவ்விழாவினில் *தயாரிப்பாளர் ராஜாளி பேசியதாவது..* கெத்துல மிகச்சிறப்பான படைப்பாக வந்துள்ளது. நடிகர் ஶ்ரீஜித் கேஜிஃஎப் யாஷ் போல் தோற்றமளிக்கிறார். படம் வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துகள். *நடிகர் ஶ்ரீஜித் பேசியதாவது…* நான் பெங்களூரிலிருந்து வருகிறேன். இயக்குநர் தன் ரத்தத்தை கொட்டி இந்தப்படத்தை உருவாக்கியிருக்கிறார். கன்னட படங்கள் செய்துள்ளேன். தமிழில் இந்தப்படம் போல் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைக்கவில்லை. இந்தப்படத்தில் ஆக்ஷன், காமெடி செண்டிமெண்ட் என எல்லாமும் இருக்கிறது. இந்தப்படம் நன்றாக வந்துள்ளது எங்களை வாழ்த்தி ஆதரவு தாருங்கள், நன்றி.*நாயகி ஈரின் பேசியதாவது..* இந்தப்படம் ஒரு பான் இந்தியப்படம் எனக்கு இந்தப்படத்தில் வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.

*இசையமைப்பாளர் ஜீவா வர்ஷினி பேசியதாவது* இயக்குநர் என்னை ஒரு புரோகிராமில் பார்த்துவிட்டு என் படத்திற்கு நீங்கள் தான் மியூசிக் என்றார். இந்தப்படம் முழுதுமே டீம் ஒர்க் தான். மிக கடின உழைப்பை தந்து இப்படத்தை உருவாக்கியுள்ளோம். இயக்குநர் மிக அழகாக படத்தை உருவாக்கியுள்ளார். நான் சங்கர் கணேஷ் அவர்களின் சிஷ்யை அவருக்கு நன்றி. உங்களுக்கு என் பாடல்கள் பிடிக்குமென நம்புகிறேன். இயக்குநர் V.R.R அவர்களுக்கு நன்றி.

*நடிகர் ஸ்டண்ட் இயக்குநர் பெப்சி விஜயன் பேசியதாவது…* கெத்துல டிரெய்லரே கெத்தாக இருக்கிறது. நாயகன் ஶ்ரீஜித் கலக்கியிருக்கிறார். படம் பார்க்க நன்றாக வந்துள்ளது. சினிமாவில் தான் மொழிப்பிரச்சனை இல்லாமல் இருக்கிறது அதனால் தான் சினிமாவுக்கு தேசிய விருது தருகிறார்கள். இங்கு வந்துள்ளவர்கள் ரிஷி ராஜுக்காக வந்துள்ளார்கள். அவர் கண்டிப்பாக ஜெயிப்பார். எல்லோருக்கும் வாழ்த்துகள்.*தயாரிப்பாளர் RFI Films சார்பில் அன்பு பேசியதாவது…* இயக்குநர் V.R.R எனக்கு நெருக்கமாக தெரியும் கடுமையாக உழைக்க கூடியவர். இந்தக்குழு மிக கடினமாக உழைத்து இந்தப்படத்தை உருவாக்கியுள்ளனர் அனைவருக்கும் வாழ்த்துகள், நன்றி. *இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் பேசியதாவது…இயக்குநருக்கு மூன்று எழுத்து பெயர் V.R.R. சினிமாவில் மூன்றெழுத்து பெயரிருந்தால் பெரிய வெற்றி பெறுவார்கள். இசையமைப்பாளர் எனது சிஷ்யை, அவரை இசையமைப்பாளராக்கிய இயக்குநருக்கு நன்றி. இந்தக்குழு மிகப்பெரிய வெற்றி பெற என் வாழ்த்துகள், நன்றி.

*பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது…இந்தபடத்தில் என் பங்களிப்பு இல்லாவிட்டாலும் நட்புக்காக அழைத்தமைக்கு நன்றி. திறமையிருந்தும் அங்கீகாரத்திற்காக முயற்சிப்பவர்களின் படம் இது. இந்தப்படம் பெரிய வெற்றி பெற வேண்டும் எல்லோரும் அங்கீகாரம் பெற வேண்டும். அண்ணன் ரிஷி ராஜ் உண்மையாய் சினிமாவை நேசிப்பவர். அவருக்கு சினிமா தவிர எதுவும் தெரியாது. இந்தப்படம் ஓடுவதற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. இப்படத்தில் ஸ்ரீஜீத், ஈரீன் அதிகாரி, ஷாயாஜி ஷிண்டே, ரவி காலே, வீரேந்திர சக்சேனா, சலீம் பாண்டா, குரு சந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். அனைத்து அம்சங்களும் நிரம்பிய ஆக்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்குவரவுள்ளது.