“பணி” திரைப்பட விமர்சனம்

எம்.ரியாஸ் ஆதம் மற்றும் சிஜோ வடக்கன் தயாரிப்பில் ஜோஜீ ஜார்ஜ் இயக்கத்தில் ஜோஜீ ஜார்ஜ் , அபிநயா ஆனந்த்சாகர் சூர்யா, சீமா ஐ.வி.சசி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் “பணி”. கேரள மாநிலம் திரிச்சூரில் மிகப்பெரிய தாதா குடும்பமாக வாழ்ந்து வ்ருகிறார் ஜோஜீ ஜார்ஜ். பல குற்ற வழக்குகள் அவர்களது மீது காவல்நிலையத்தில் தேங்கிக் கிடக்கிறது. அவ்வளவு செல்வாக்கு மிகுந்த ரவுடிச குடும்பம். ஜோஜீ ஜார்ஜின் இளம் மனைவி அபிநயா ஆனந்த்சாகர். வெளியூரைச் சேர்ந்த ஒரு இளம் ரவுடி ஒருவன் அபிநயாவின் அழகில் மயங்கி அவரது இடுப்பில் கைவைத்து விடுகிறான். அந்த ரவுடியை ஜோஜீ ஜார்ஜ் அடித்து நொறுக்கிவிடுகிறார். பலத்த காயமடைந்த அவன் வம்மம் வைத்து ஒருநாள் அபிநயாவை கற்பழித்து விடுகிறான். மிகப்பெரிய ரவுடி குடும்பத்த்கையே இந்த இளம் ரவுடி ஆட்டிப்படைக்கிறான். “அவன் ஒருநாள் உன் கையில் கிடைப்பான் அவனை சிதைத்துவிடு” என்று ஜோஜீயின் தாய் சீமா சொல்கிறார். அவன் கிடைத்தானா? தாய் சொன்னதுபோல் அவன் சிதைக்கப்பட்டானா? என்பதுதான் கதை. இது ஒரு மலையாளப்படம்.  தமிழ் மொழியில் மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆரவாரம் இல்லாமல் அமைதியான முறையில் ரவுடிசத்தை காட்சிப்படுத்தியிருக்கிறாகள். இது பார்வையாளர்களை மிகவும் ரசிக்க வைக்கிறது. மென்மையான ரவுடிசத்தை கொடுத்த் இயக்குநரை பாராட்ட வேண்டும். ரவுடிக் குடும்பத்தினர்  கலைநயத்துடன் வாழ்கிறார்கள். தமிழக ரசிகர்களுக்கு இப்படம் ஒரு புதுமையான ரசனையை கொடுத்துள்ளது. அடிதடி காட்சிகளையும் அபிநயத்துடன் படமாக்கியுள்ளார்கள். வாழ்த்துக்கள்