Royal B Productions சார்பில் நான்சி ஃப்ளோரா தயாரிப்பில், இயக்குநர் டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ்இயக்கத்தில், புதுமுக நட்சத்திரங்கள் நடிப்பில், அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக உருவாகி வரும்திரைப்படம் “நெவர் எஸ்கேப்“. விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தில் ஆதி பிருத்வி, ஹர்ஷினி முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, நடன இயக்குநர் ராபர்ட் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் கவி ஜே சுந்தரம், உவைஸ் கான், ராஜி, அகிலா சுந்தர், ஜெபின் ஜான், பிரணேஷ்வர், சஷ்டி பிரணேஷ் இணைந்து நடித்துள்ளனர்.*******
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக சென்னை வேலூர் பகுதியை ஒட்டிய ஆரணியில் படமாக்கப்பட்டுள்ளது. மிக வித்தியாசமான வகையில் இப்படத்தின் மூன்று பாடல்களில் ஒரு பாடல், முழுக்க ஆங்கிலத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
Royal B Productions சார்பில் நான்சி ஃப்ளோரா பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். அம்முச்சிமுதலான பல நக்கலைட்ஸ் சீரிஸ்களுக்கு ஒளிப்பதிவு செய்த சந்தோஷ் குமார் SJ இப்படத்திற்கு ஒளிப்பதிவுசெய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாகநடைபெற்று வருகிறது.
*தொழில் நுட்ப குழு விபரம்* எழுத்து இயக்கம் – டிஶ்ரீ அரவிந்த் தேவ் ராஜ் ஒளிப்பதிவு – சந்தோஷ் குமார் SJ எடிட்டர் – குரு பிரதீப் இசை – சரண் குமார் கலை இயக்குனர் – முத்து மக்கள் தொடர்பு – பரணி அழகிரி, திரு முருகன்.