தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

  ஒரு போர்க் களத்திற்கு எப்படி குதிரைப்படை, காலாட்படை, யானைப்படை போன்ற பல படைகளைபோர்க்களத்தில் பயன்படுத்துவார்கள். அதேபோல, ஒன்றிய அரசை தலைமை தாங்கி நடத்திக்கொண்டிருக்கின்ற மோடி அரசு, பா... அரசு, எப்படி போர்க் களத்தில் குதிரைப்படை, காலாட்படை, யானைப் படை போன்று பல படைகளை வைத்து தேர்தல் எனும் போர்க்களத்தினை சந்திக்குமோ, அதேபோல, இந்த ஜனநாயக நாட்டில், வருமான வரித் துறை (.டி.), அமுலாக்கத் துறை (.டி), மத்தியபுலனாய்வுத் துறை (சி.பி.அய்.) என்கின்ற இந்த மூன்று படைகளை கைகளில் வைத்துக்கொண்டு, எதிர்க்கட்சிகளைப் பழிவாங்கிவிடலாம் என்று கனவு காண்கின்றனர்.

அதிலும் குறிப்பாக நடந்து முடிந்த கருநாடக சட்டமன்றத் தேர்தல் ஒரு மிகப்பெரிய பீதியை, அச்சத்தை, பயத்தை, நடுக்கத்தை பா...விற்கு ஏற்படுத்தி விட்டது.

அவர்கள் கற்ற வித்தைகள் அத்தனையையும் கருநாடகத்தில் காட்டினார்கள். இதுவரையில் மோடிஅவர்கள் எந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்கும், இதுபோன்று பிரச்சாரம் செய்தது கிடையாது.

ஒரு முனிசிபால்டி கவுன்சிலர் ஓட்டு கேட்பதைப் போல, இந்த நாட்டினுடைய பிரதமராக இருக்கின்றமோடி அவர்கள், 27 கிலோ மீட்டர்ரோடு ஷோநடத்தினார்.தெருத்தெருவாகப் போனார்; கார்ப்பரேசன்கவுன்சிலர் தேர்தலில், வேட்பாளருக்கு ஓட்டுக் கேட்பதைப்போல, ஓட்டுக் கேட்டார்.

என்னென்னமோ வேடங்கள் காட்டினார். இராமர் பெயரை நாடாளுமன்றத் தேர்தலிலே பயன்படுத்தி, ஆட்சிக்கு வந்ததைப்போல, அனுமன் பெயரைப் பயன்படுத்தி, கருநாடகத்தில் ஆட்சியைப்பிடித்துவிடலாம் என்று நாடகமும் ஆடினார்கள்.

அதற்கு அவர் சொன்ன காரணம், அனுமன் கருநாடகத்தில்தான் பிறந்தார் என்று சொல்லி, அனுமன்பெயரில் அரசியல் நடத்தினார்கள்.

அதுமட்டுமல்ல, பணத்தைக் கொண்டு போய் குவித்தார்கள். நீங்களெல்லாம் வாட்ஸ்அப்பில்பார்த்திருப்பீர்கள்; ஊடகங்களிலும் காட்டினார்கள்.

தாமரைச் சின்னம் பதிக்கப்பட்ட ஒரு கவருக்குள் ஐந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வைத்து, வாக்காளர்களுக்கு ஓட்டுக்குப் பணம் கொடுத்ததைப் பார்த்திருப்பீர்கள்.

ஆக, 2000 ரூபாய் நோட்டு, 2018 ஆம் ஆண்டிற்குப் பிறகு புழுக்கத்தில் அவ்வளவாக இல்லை. ஆனாலும், கருநாடக மாநிலத் தேர்தலில், பா...வைச் சேர்ந்தவர்கள் 2000 ரூபாய் நோட்டுகளைத்தான்உபயோகித்திருக்கிறார்கள் என்பது பட்டவர்த்தனமாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாகஎன்மீது வழக்குப் போட்டால்கூட, அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட  பணம் இருக்கிறது; அதனைநிரூபிப்பதற்கு, காங்கிரஸ் கட்சியும், நாங்களும் தயாராக இருக்கின்றோம்.

ஆக, கருநாடகத் தேர்தலுக்காக அவர்கள் நடத்திய அத்துணை நாடகங்களுக்குப் பிறகும், மிகப்பெரியவெற்றியை காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் அளித்திருக்கிறார்கள்.

நான்கூட ஒரு பேட்டியின்போது சொன்னேன்; கருநாடகத்தில் முதல் விக்கெட் வீழ்ந்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில்இறுதிப் போட்டியில், மேன் ஆஃப்தி மேட்ச்சாஎங்கள் தலைவர் மு..ஸ்டாலின்தான் இருப்பார் என்று, தேர்தல் பிரச்சாரத்தின் கடைசிநாளன்று, ஓசூர் அருகே நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசினேன்.

ஆக, அந்தத் தேர்தலினுடைய முடிவு, இன்றைக்குக் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை மிகப்பெரியஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், 2000 ரூபாய் நோட்டின் மதிப்பிழப்புகூட கருநாடகத் தேர்தல் முடிவு ஒருகாரணமாக இருக்குமோ என்று சில அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவித்திருக்கின்றனர். அதுகூடநம்பத்தக்கதாக இருக்கலாம்.

ஆக, இப்படிப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில், குறிப்பாக எங்கள் முதலமைச்சர் தளபதி மு..ஸ்டாலின்அவர்கள், கடந்த 23 ஆம் தேதி சிங்கப்பூருக்கும், ஜப்பானுக்கும் சென்று முதலீட்டார்களை சந்தித்து, தமிழ்நாட்டில் அவர்கள் தொழில் தொடங்க அழைப்பதற்காக சென்றிருக்கின்றார்.

நித்தம் நித்தம் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள், அந்த நாட்டினுடைய தொழிலதிபர்களுடன் பேசி, எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டிருக்கின்றார் என்பது செய்தித் தாள்களிலும், ஊடகங்களிலும் கடந்த இரண்டு நாள்களாக செய்திகளைப் பார்க்கலாம்.

அகில இந்திய பத்திரிகைகளில்கூட அந்தச் செய்திகள்தான் வருகின்றன. அந்த அளவிற்குமுதலீட்டார்கள், தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்குத் தொழில் புரட்சியை ஏற்படுத்துவதற்குதளபதி மு..ஸ்டாலின் அவர்களுடைய முயற்சிகள்நாள்தோறும் பத்திரிகைகளின் வாயிலாக மக்கள்மத்தியில் போய்ச் சேருகிறது.

எனவே, இதை திசை திருப்புவதற்கு என்ன முயற்சி செய்யலாம் என்கிற ஒரு வஞ்சக எண்ணத்தோடு, தளபதி மு..ஸ்டாலின்தமிழ்நாடு முதலமைச்சர் ஊரில் இல்லாத  இந்த நேரத்தில், அவரைப்பற்றிசெய்திகள், தமிழ்நாட்டிற்கு வருகின்ற தொழில்கள்பற்றிய முன்னேற்றம்பற்றிய செய்திகள் எல்லாம்வருவதை ஜீரணித்துக் கொள்ள முடியாத பா... அரசு, இன்றைக்கு ஒரு ரெய்டைநடத்தியிருக்கின்றார்கள்.

ரெய்டு செய்வதைப்பற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் எந்தக் காலத்திலும்கவலைப்பட்டது கிடையாது.

1976ஆம் ஆண்டு நெருக்கடி காலத்திலேயே, ரெய்டு என்றால் என்னவென்று தெரியாத காலகட்டத்திலேயே, பார்த்து, சந்தித்து அவற்றையெல்லாம் முறியடித்து வெற்றி பெற்ற ஓர் இயக்கம்இந்தியாவிலே உண்டு என்று சொன்னால், அந்த இயக்கத்திற்குப் பெயர் திராவிட முன்னேற்றக் கழகம்.

குறிப்பாக, அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களைக் குறி வைக்கிறார்கள்; அதற்கு என்ன காரணம்என்றால், 10 நாள்களுக்கு முன்பு அண்ணாமலை பேட்டியளித்ததைப் பார்த்திருப்பீர்கள்.

அண்ணாமலை, கருநாடகத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்து தன்னைஅடையாளம் காட்டிக்கொள்ள ஒரு பேட்டி கொடுத்தார்.

அந்தப் பேட்டியில் சொன்னார், பா... என்றால் என்ன? அதனுடைய அதிகாரம் என்ன? என்பதைப்பற்றியெல்லாம் சொன்னார். அதனுடைய விளைவுகளை இன்னும் 10 நாள்களில்செந்தில்பாலாஜி சந்திப்பார் என்று பகிரங்கமாக சொன்னார்.

இன்று மட்டுமல்ல, 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதமும் சொன்னார். அன்று பேட்டி அண்ணாமலை பேட்டிகொடுத்தார்.

இப்பொழுது பிசியாக இருக்கிறோம்; அந்தப் பிசி முடிந்ததும் செந்தில்பாலாஜிக்கு ரெய்டு விடுவோம்என்று பகிரங்கமாக அன்றும் அண்ணாமலை சொன்னார்.

செந்தில்பாலாஜியைக் குறி வைப்பதற்குக் காரணம் என்னவென்று சொன்னால், நடந்து முடிந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், கோவை மாவட்டத்திலும், கரூர் மாவட்டத்திலும் கணிசமானஇடங்களை .தி.மு.. பெற்றது.

செந்தில்பாலாஜி அவர்கள் அந்த இரண்டு மாவட்டங்களினுடைய பொறுப்பை, தலைமைக் கழகத்தால்ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு, நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு கோவைமாவட்டத்திலும், கரூர் மாவட்டத்திலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது.

ஆகவே, அவரை முடக்கவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட காரியங்களை அண்ணாமலை திட்டமிட்டுசெய்திருக்கிறார் என்பதை அவருடைய பேச்சுகளையே உதாரணமாகக் காட்ட முடியும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஊரில் இல்லாத நேரத்தில், இப்படி ரெய்டு நடத்துவது என்பதுபி.ஜே.பி.யினுடைய மிகக் கேவலமான அரசியலைத்தான் காட்டுகிறது.

பொதுவாக, ஒரு ரெய்டு நடத்துவதற்கு முன்பாக, அந்தந்த மாநில காவல்துறையினருக்குச் சொல்லி, உள்ளூர் காவல்துறையினரை அழைத்துக்கொண்டுதான் ரெய்டுக்குப் போவது வழக்கம். இந்தத் தகவல்பத்திரிகையாளர்களாக உங்கள் அனைவருக்கும் தெரியும். நாடறிந்த உண்மை இது.

ஆனால், திட்டமிட்டே, செந்தில்பாலாஜிக்கு வேண்டப்பட்டவர்களின் வீடுகளில் எல்லாம் ரெய்டுநடத்தியிருக்கிறார்கள். தமிழ்நாடு காவல்துறைக்குத் தகவல் இல்லை என்று காவல்துறை அதிகாரியேசொல்கிறார்.

இதில் எனக்கு இருக்கின்ற சந்தேகம் என்னவென்றால், திட்டமிட்டு இப்படி ஒரு காரியத்தைசெய்யும்பொழுது, கொந்தளிப்பு ஏற்படும். சாதாரணமாக, செல்வாக்குடன் இருக்கும் ஒரு பஞ்சாயத்துத்தலைவரை கைது செய்யும்பொழுது, ஒரு 10 பேர் அதைத் தடுப்பது இயற்கைதான்.

கடந்த ஆட்சிக்காலத்தில், விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு நடந்தபொழுது, கலவரங்கள் நடைபெற்றதைப்பார்த்திருப்பீர்கள். அப்பொழுது ஆட்சியில் இருந்தவர்கள் நடவடிக்கை எடுத்தார்களா? இல்லையே!

ஆனால், இப்பொழுது காவல்துறைக்குத் தெரிவிக்காமல், ரெய்டு நடத்த வந்திருக்கின்றார்கள் என்றால், அவர்கள் யார் என்பது தெரியுமா? அவர்கள் வருமான வரித் துறையைச் சேர்ந்தவர்கள்தானா? என்றுயாருக்குத் தெரியும்.

இரவில் வந்தால், அவர்கள் கொள்ளையடிக்க வருகிறார்களா? திருடுவதற்காக வருகிறார்களா? கொலைசெய்வதற்காக வருகிறார்களா? என்று சந்தேகப்படுவது நியாயமானதுதானே

என்னுடைய வீட்டிற்கு இரவு 12 மணிக்கு ஒருவர் வருகிறார் என்றால், எனக்குப் பயமாக இருக்குமா? இருக்காதா? அவன் நல்லவனா? கெட்டவனா? என்னைக் கொல்ல வருகிறானா? திருடனா? அயோக்கியனா? என்கிற எண்ணம் வருமா, இல்லையா?

அதுபோன்று, தற்காப்புக்கு சில செயல்கள் நடந்திருக்கலாம்.

இந்தத் தகவல் எங்களுக்குத் தெரிந்தவுடன், குறிப்பாக எனக்குத் தெரிந்தவுடன், உடனடியாகசெந்தில்பாலாஜியைத் தொடர்புகொண்டு, அங்கே தி.மு..வைச் சேர்ந்தவர்கள் யாரும் இருக்கக்கூடாதுஎன்று சொன்னேன்; உடனடியாக அவர்கள் கலைந்து சென்றார்கள்.

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், திட்டமிட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தவேண்டும்என்பதுதான். வருமான வரித் துறை அதிகாரிகளை அடித்தார்கள் என்கிற செய்தியைப் போட்டு, அதை ஒருகாரணமாக வைத்து, தி.மு.. அரசின்மீது களங்கம் சுமத்தலாம் என்று செய்யப்பட்டதோ என்றுநடுநிலையாக இருக்கின்ற மக்கள்கூட நினைக்கின்ற அளவிற்கு இந்த அய்.டி. ரெய்டு நடைபெற்றுஇருக்கிறது.

நான் திட்டமிட்டுச் சொல்கிறேன், தெளிவாகச் சொல்கிறேன்எத்தனை ரெய்டு வேண்டுமானாலும்நடத்தட்டும்; அதைப்பற்றி கவலையில்லை. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதலைவர் மு..ஸ்டாலின்அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகுயார் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுப்பதற்குத் தயாராகஇருக்கிறார்.

அப்படி அதிகாரிகள் ரெய்டு நடத்தி, என்ன முடிவெடுத்தாலும் எடுத்துக்கொள்ளட்டும்; அதைப்பற்றிகவலையில்லை.

இந்த ரெய்டுகள் எப்படிப்பட்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.

டில்லியில் துணை முதலமைச்சராக இருந்த மணிஷ் திவாரி, குஜராத்தில் தேர்தல் பணியாற்றினார்என்பதற்காக, திகார் சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

அதேபோல, கெஜ்ரிவால் கட்சியைச் சார்ந்த இன்னொரு அமைச்சர் சத்தியேந்திர ஜெயின் சிறையில்இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்திருக்கிறது.

இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால், கருநாடக மாநிலத் தேர்தலின் முடிவிற்குப் பிறகு, எல்லாஎதிர்க்கட்சிகளும் மிக வேகமாக இயங்கக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டு இருக்கிறது. இதை சிதைக்கவேண்டும்என்கிற எண்ணத்தோடு இதுபோன்ற ரெய்டுகள் நடைபெறுகின்றன.

அமுலாக்கத் துறை தோன்றிய நாள்முதல் இதுவரை நடத்தப்பட்ட ரெய்டுகளில், எத்தனை வழக்குகள்போட்டு, நிரூபிக்கப்பட்டு இருக்கிறது?

நாடாளுமன்றத்தில் தந்த தகவல்கள்படி, ஆர்.டி.. தகவல்படி
.05
சதவிகிதம்தான். அதாவது நூறு வழக்குப் போட்டால், அரை வழக்குத்தான் நிரூபிக்கப்பட்டுஇருக்கிறது. இதைத்தான் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

நான் ஏற்கெனவே சொன்னதைப்போல, போர்க் களத்தில் படைகளை நிறுத்தி பயன்படுத்துவதைப்போல, – குதிரைப் படைகள், காலாட்படைகள், யானைப் படைகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதைப்போல, வருமான வரித் துறையை வைத்து, ரெய்டு நடத்தி பழிவாங்குகிறார்கள். அதைப்பற்றி நிச்சயமாக நாங்கள்கவலைப்படவில்லை.

அதோடு மட்டுமல்ல, தாக்கப்பட்டார்கள் என்று சொல்லக்கூடிய சம்பவம்உடனடியாக காவல்துறையின்கவனத்திற்குச் சென்று, அங்கே அவர்கள் சென்று பாதுகாப்புக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆகவே, திட்டமிட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தவேண்டும் என்கிற நோக்கத்தோடும், எங்கள் தலைவர் தளபதி மு..ஸ்டாலின் ஊரில் இல்லாத நேரத்தில், அவர் வெளிநாட்டுப்பயணத்திலிருந்து நித்தம் நித்தம் வருகின்ற செய்திகள்நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள்தமிழ்நாட்டிற்கு வர, அதன்மூலமாக லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கொடுக்கும்நிறுவனங்கள் விரைவில் தமிழ்நாட்டிற்கு வரப்போகின்றன என்கிற செய்தியைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல், ஏனென்றால், ஆண்டிற்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை கொடுப்போம் என்றுசொன்னார்கள்; சொன்னபடி கொடுக்கவில்லை. ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம்போடுவோம் என்று சொன்னார்கள்; அதன்படியும் அவர்கள் நடக்கவில்லை.

ஆகவே, அவர்களுடைய தோல்விகளை மறைப்பதற்காக இப்படிப்பட்ட நடவடிக்கைகளைமேற்கொள்கிறார்கள்; அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை.

 செய்தியாளர்: இதற்குமுன்பும் வருமான வரித் துறையின் ரெய்டு நடைபெற்றுஇருக்கிறதே, அந்த அதிகாரிகளின் வாகனங்கள் தாக்கப்பட்டது போன்ற சம்பவங்கள்நடைபெறவில்லையே?

 ஆர்.எஸ்.பாரதி: முன்பு நடந்த ரெய்டு எல்லாம், காவல்துறையினருக்குத் தகவல்கொடுத்து நடைபெற்றது. ஆனால், இது மிட்நைட் மசாலா போன்றுவிடியற்காலை 3 மணிக்கு வந்து ஒரு வீட்டின் கதவைத் தட்டினால், தட்டுபவன் கொலைகாரனா? திருடவந்தானா? என்று சந்தேகப்படக் கூடிய வாய்ப்பு இருக்கிறதா? இல்லையா?

  ஆகவே, இதுபோன்று ரெய்டு செய்யப் போகும்பொழுது, காவல்துறையினரோடு செல்வதுதான் வழக்கம். இதுவரை தமிழ்நாட்டில் நடைபெற்றரெய்டுகளில் காவல்துறையினர் இல்லாமல் சென்றிருக்கார்களா என்று சொல்லட்டும்.

 செய்தியாளர்: வருமான வரித் துறை அதிகாரிகளின் வாகனங்களை வழிமறித்துத்தாக்கி இருக்கிறார்களே?

 ஆர்.எஸ்.பாரதி: அவர்களுடைய வாகனங்களை தெரியாமல் தாக்கியிருக்கிறார்கள். அடியாட்களும் வண்டியில் வந்துதான் தாக்குகிறார்கள்.

எங்களுக்குத் தகவல் கிடைத்ததும், உடனடியாக அங்கே இருந்த அனைவரும்கலைந்து சென்றுவிட்டனர்; காவல்துறையினரும் அங்கே சென்றுவிட்டார்கள். சட்டம்ஒழுங்குப் பிரச்சினை ஏற்படவில்லை.

 செய்தியாளர்: அங்கே நடைபெற்றது சரியான செயல்தானா?

 ஆர்.எஸ்.பாரதி: அங்கே நடைபெற்ற சம்பவம் நியாயமானதுதான் என்று நான்சொல்லவில்லை. நடந்தது தவறுதான். ஆனால், உடனே அதனைத் தடுத்துவிட்டோம். அப்படியில்லாமல், காவல்துறையினரின் உதவியோடு அடிக்கச் செய்திருந்தால், நீங்கள் சொல்வதுபோன்று தவறு.   ஆனால், காவல்துறையினரை அனுப்பி, அங்கேஇருப்பவர்களை கலைந்து செல்லுமாறு கூறினோம்.   இதில் உங்களுக்கு ஏதாவதுசந்தேகம் இருந்தால், காவல்துறை எஸ்.பி.யிடம் கேளுங்கள். முழுத் தகவல்களையும்சொல்வார்.

 செய்தியாளர்: எஸ்.பி.,க்கு தகவலே தெரியாது என்று சொல்கிறாரே?

 ஆர்.எஸ்.பாரதி: அய்.டி. துறையைச் சேர்ந்தவர்களும் ஒருவகையான போலீஸ்தான். அவர்களும் ஏமாற்றக் கூடிய வகையில் செய்திருக்கிறார்கள்.

 செய்தியாளர்: .தி.மு.. மேனாள் அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர்சோதனை நடத்தியபொழுது, சட்டம் தன் கடமையை செய்யும் என்று சொன்னீர்கள்; இப்பொழுது வருமான வரித் துறையினர் தி.மு..வினர் வீடுகளில் ரெய்டுநடத்தியபொழுது, பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்கிறீர்களே?

 ஆர்.எஸ்.பாரதி: பழிவாங்கும் நடவடிக்கை என்று நான் சொல்லவில்லை. இன்றைக்குநான் சேலஞ்ச் பண்ணி சொல்கிறேன்; தவறு செய்பவர்களின் வீடுகளில் ரெய்டுபோவது தவறு கிடையாது. அதைப்பற்றி நாங்கள் பயப்படவே இல்லைஅண்ணாமலை சொன்ன பிறகு செய்கிறீர்கள் என்றால், அண்ணாமலை என்ன சி.பி.. இயக்குநரா? வருமான வரித் துறை இயக்குநராயார் அவர்? அதனால்தான் சந்தேகம்வருகிறது.

 செய்தியாளர்: ஒன்றிய அரசு, செந்தில்பாலாஜியை மட்டும் குறி வைப்பது ஏன்?

 ஆர்.எஸ்.பாரதி: இரண்டு மாவட்டங்கள் .தி.முக..வினுடைய கோட்டையாகஇருந்ததை உடைத்துக் காட்டி, உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் வெற்றி பெற வழிவகுத்தார் என்பதுதான்.