உண்மை சம்பவங்களின் அடிப்படையில் தயாராகும் “முருகர்” திரைப்படம்

வலதுசாரி அரசியல்வாதியாகவும் திரைப்பட தயாரிப்பாளர், நடிகர் மற்றும் விநியோகஸ்தராகவும் பரபரப்பாக இயங்கி வந்த ஜெ எஸ் கே கோபி என்று அழைக்கப்படும் ஜெயம் எஸ் கே கோபி, இன்று ஒரு முழு நேர முருக பக்தர். தமிழ் கடவுளான ஆறுமுகனின் புகழை தனது இடைவிடாத செயல்பாடுகள் மூலமும் சமூக ஊடகங்கள் வாயிலாகவும் அகிலமெங்கும் பரப்பி வரும் ஜெயம் கோபியின் வாழ்க்கை பயணத்தை மாற்றி அமைத்தது 2023ம் ஆண்டு செப்டம்பரில் நண்பருடன் அவர் மேற்கொண்ட இமயமலை பயணம் தான்.**********


இதைத்தொடர்ந்து முருகரின் மகிமைகள் குறித்து தொடர்ந்து பேட்டிகள் அளித்து வந்த ஜெயம் கோபி, திடீரென்று ஒரு நாள் முருகர் உத்தரவிட்டதாக கூறி அரசியலில் இருந்து விலகி முழு நேர ஆன்மிகவாதியாக மாறினார். அதன் பின்னர் முருகரின் உத்தரவை ஏற்று காது கேளாத, வாய் பேசாத, கண் தெரியாத மற்றும் ஆட்டிசம் உள்ள குழந்தைகளை தெய்வக் குழந்தைகள் என்று அழைத்து அவர்களுக்கு தொடர்ந்து உதவி வருகிறார்.