எஸ்.லாவண்யா இயக்கி இருக்கும் திரைப்படம் பேய் கொட்டு .லாவண்யா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இவருடன் தீபா சங்கர், ஸ்ரீஜா ரவி, சாந்தி ஆனந்தராஜ், பட்டம்மா, ஆடம், சசிகுமார், இலும்பு செல்வம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சினிமா துறையில் உள்ள 32 துறைகளையும் இயக்குனர் லாவண்யாவே கையாண்டு உள்ளார். இதைத் தொடர்ந்து தயாரிப்பு, இயக்கம், கதை, திரைக்கதை, வசனம், இசை, பின்னணி குரல் பதிவு, படத்தொகுப்பு, சண்டைக்காட்சி, நடனம், ஒளிப்பதிவு, உள்ளிட்ட 32 பணிகளையும் சுயமாக கற்று பேய் கொட்டு திரைப்படத்தை உருவாக்கி உள்ளார். இத்திரைப்படம் மார்ச் 21 முதல் திரைக்கு வருகிறது.
“பேய் கொட்டு” திரைப்படம் மார்ச் 21ல் வெளியீடு
