தமிழில் கயிறு, வாண்டு திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தவர் எஸ்.ஆர்.குணா. 2019_ல் கொல்கத்தா இண்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஷ்டிவல் மற்றும் செவன் கலர்ஸ் பேச்சுலர்ஸ் இண்டர்நேஷனல் ஃபில்ம் ஃபெஷ்டிவல் 2019 மெக்சிகோ ஆகிய திரைப்பட விழாக்களில் “கயிறு” திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது பெற்றவர். தற்போது ‘சேயன் ஸ்டுடியோ‘ நிறுவனம் தயாரிக்கும் “தீர்ப்பு” என்ற படத்தின் மூலம் இயக்குநராகி உள்ளார்.******
இன விடுதலைக்காக போராடும் நாடுகளில் இருந்து போராளிகள் தீவிரவாதிகள் என அந்தந்த நாட்டின் அரசாங்கங்களால் தடை செய்யப்படுவதால், போராளிகள் மேற்கத்திய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோறுகிறார்கள். அப்படி ஒரு போராளி தான் ஒரு இனவிடுதலைக்காகப் போராடியவன் என உண்மை கூறி அரசியல் தஞ்சம்கேட்கும்போது அவனுடைய கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது. ஆனால் அவன் சர்வதேச நீதிமன்றத்தில் வாதாடிதனக்கு சாதகமான தீர்ப்பையும்,இன விடுதலைக்கான திறவுகோலையும் எப்படி ஏற்படுத்துகிறான என்ற கருவை மையமாக வைத்து திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.