சாய்ராம் புரடெக்ஷன் மற்றும் எஸ்.பி.எம்.பிக்சர்ஸ் சாய் சரண் இணைந்து வழங்கும், சாய்பிரபா மீனா இயக்கத்தில், சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் கொடுமைகளை வெளிப்படுத்தி, பெண் பாதுகாப்பை மையப்படுத்தி, அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “இனிமே நாங்கதான் ஹெட்லைன்ஸ்“. இப்படத்தின் முன்னோட்டக்காட்சி வெளியிடும் நிகழ்வில் பேசிய நடிகர் ஜெய் ஆகாஷ் பேசியதாவது: ‘இயக்குநர் சாய் பிரபா என் தம்பி மாதிரி. எனக்காக என்னவேணாலும் செய்வான். அவனுக்கு ஜெயிக்க வேண்டும் என்ற வைராக்கியம் இருக்கிறது. அவன் இயக்குநர் ஆக வேண்டும் என்று எடுத்த படம் தான் யோக்கியன். இப்போது அவனே அவன் முயற்சியில் இனிமே நாங்கதான் ஹெட்லைன்ஸ் படத்தை இயக்கியுள்ளான். படத்தில் இருக்கும் அனைவரும் என் நண்பர்கள் தான். நான் நிறைய பேருக்கு உதவி செய்துள்ளேன். ஆனால் சாய் தான் நன்றி மறக்காமல் இருக்கிறான். இவனிடம் உழைப்பும் அர்ப்பணிப்பும் உள்ளது அவன் ஜெயிக்க வேண்டும்.********.
இயக்குநர் சாய் பிரபா மீனா பேசியதாவது…இந்த இடத்தில் நான் நிற்க காரணம் என் ஆசான் ஜெய் ஆகாஷ் அவர்கள் தான், அவருக்கு என் நன்றி. சிறுபட தயாரிப்பாளர் சங்க தலைவர் அன்பு செல்வன் மிகப்பெரும் ஆதரவைத் தந்தார். தயாரிப்பாளர்ராம்குண்டலா ஆஷா அவர்கள் தான் படத்தை நம்பி எனக்கு வாய்ப்பு தந்து தயாரித்தார்கள். ஷகிலாமேடம் படபடவென பட்டாசு போல் நடித்து முடித்தார். மீசை ராஜேந்திரன் சார் நன்றாக நடித்து தந்தார். ஜெய் ஆகாஷ் சார் மூலம் தான் எனக்கு இங்குள்ள அனைவரையும் தெரியும். எல்லோருக்கும் என்நன்றிகள். பெண்களை மையப்படுத்தி, அவர்களுக்கு நடக்கும் பிரச்சனைகளை மையப்படுத்தி, இந்தப்படத்தை எடுத்துள்ளேன். ஒளிப்பதிவாளர் மிகப்பெரும் உறுதுணையாக இருந்தார். இசையமைப்பாளரை நான் நிறைய டார்ச்சர் செய்திருக்கிறேன். இப்படத்தில் படம் நன்றாகவரவேண்டுமென எல்லோருடனும் சண்டை போட்டுள்ளேன். ஆனால் அவர்கள் படத்திற்காகஅர்ப்பணிப்போடு உழைத்துள்ளனர். சின்ன படம் பெரிய படம் என எதுவும் இல்லை அதை வைத்துமனிதர்களின் திறமையை எடை போடாதீர்கள். உலகமே கிறுக்கன் என சொன்ன எலான் மஸ்க் இன்றுஉலகையே ஆளுகிறார். எனில் என்னைமாறி இளைஞர்களும் ஜெயிக்க முடியும் என நம்புகிறேன். அனைவருக்கும் என் நன்றிகள்.
நடிகர்கள் சாய் பிரபா மீனா ராஜ் மித்ரன் மீசை ராஜேந்திரன் பிர்லா போஸ் ஆஷா கவிதா சங்கீதா கீர்த்தனா கௌரவத் தோற்றத்தில் ஷகீலா தொழில் நுட்ப குழு இயக்கம் – சாய் பிரபா மீனா தொழில் நுட்ப குழு ஒளிப்பதிவு – பால்பாண்டி இசை – சந்தோஷ் ராம் எடிட்டிங் – நவீன் குமார் சண்டை பயிற்சி – சூப்பர் குட் ஜீவா ஆர்ட் டைரக்டர் – கிரண்&பண்டு இணை இயக்குனராக – ஜே டி தயாரிப்பாளர் – ராம்குண்டலா ஆஷா மக்கள் தொடர்பு – A ராஜா