இன்றைய இளைஞர்கள் எதிர்பார்க்கும் ரசனையான அழகியலுடன் தோன்றி அனைவரது செல்போன், லேப்டாப், கம்ப்யூட்டரின் டிபியாக ஆக்கிரமித்திருக்கும் அழகி சாக்ஷி அகர்வால். இதனாலேயே இவர் படு உற்சாகமாக இருக்கிறார்.
தமிழ் திரையுலகில் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற சூப்பர் ஸ்டாரின் ‘காலா’, அஜித்குமாரின் ‘விஸ்வாசம்’, சுந்தர் சியின் ‘அரண்மனை 3’ ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் தன்னுடைய தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியவர் நடிகை சாக்ஷி அகர்வால். முன்னணி நட்சத்திர நடிகைகளின் பட்டியலில் இணைவதற்காக கடுமையாக உழைத்து வரும் இவர் தற்போது கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார். ************
சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் நட்சத்திர பிரபலங்களின் வரிசையில் முன்னணியில் இருக்கும் சாக்ஷி அகர்வாலிடம் தற்போது பணியாற்றி வரும் படங்களைப் பற்றி கேட்டபோது, ” பிரபுதேவா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘பஹிரா’ மற்றும் இயக்குநரும், நடிகருமான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் ‘நான் கடவுள் இல்லை’ என்ற இரண்டு படங்களின் பணிகளை நிறைவு செய்திருக்கிறேன். ‘கெஸ்ட் – சாப்டர் 2’ எனும் அனிமல் திரில்லர் ஜானரிலான படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறேன். அறிமுக இயக்குநர் விக்கி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத படத்திங நடிகர் சந்தோஷ் பிரதாப்புக்கு ஜோடியாக அழுத்தமான வேடத்தில் நடித்து வருகிறேன். இதை தொடர்ந்து ‘கந்தகோட்டை’ படத்தை இயக்கிய இயக்குநர் சக்தி இயக்கத்தில் தயாராகி வரும் பெயரிடப்படாத இரண்டு படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறேன்.” என்றார்.
தொடர்ந்து எம்மாதிரியான படங்களில் நடிக்க விரும்புகிறீர்கள் எனக் கேட்டபோது, ” கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான கதைகளில் நடிப்பதற்கான வாய்ப்பு தொடர்ச்சியாக வருகிறது. இதில் இரண்டு மலையாள படங்களில் கதைகளை தேர்வு செய்து நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறேன். தமிழிலும் கதையின் நாயகியாக நடிப்பதற்கான வாய்ப்புகள் வருகின்றன. அவற்றில் எனக்கு பொருத்தமான கதைகளையும், கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்க திட்டமிட்டிருக்கிறேன்.” என்றார்.
சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிடுவது குறித்து கேட்டபோது, ” பட வாய்ப்பிற்காக பதிவிடவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்துகிறேன். என்னுடைய சமூக வலைதள பக்கத்தை கிட்டத்தட்ட இரண்டு மில்லியன் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் பின்தொடர்பாளர்களாக இருக்கிறார்கள். இவர்களுடனான உறவையும், நட்பையும் ஆரோக்கியமாக பேணுவதற்கு புகைப்படங்களை பதிவிடுகிறேன். தொடர்ந்து சமூகம் குறித்த ஆக்கபூர்வமான விசயங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.” என பதிலளித்தார்.
இதனிடையே நடிகை சாக்ஷி அகர்வால் நடிப்பிற்காக லாஸ்ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள சர்வதேச புகழ்பெற்ற நடிப்பு பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்றவர் என்பதும், சில ஹாலிவுட் குறும்படங்களில் நடித்து விருதுகளை வென்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.