இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி, அனன்யா, பாரதிராஜா, நாசர், தம்பிராமையா, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், இளவரசு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ’திரு.மாணிக்கம்’ திரைப்படம், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது வெளியாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பதாகை ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது ஒரு மனிதன் இன்றைய காலகட்டத்திலும் நேர்மையாக இருக்க முடியுமா… அதற்கான சாத்தியம் இருக்கின்றதா… என்ற கேள்விகளோடு இந்தப் படம் தொடங்குகிறது.********
கதையின் நாயகன் மாணிக்கத்தின்மனைவி… அவனுடைய பெரியப்பா… பெரியம்மா… மச்சினன்… மாமியார் இப்படி ஒரு கூட்டமே தனி மனிதன்மாணிக்கத்தை நேர்மையாக இருக்க விடாமல் துரத்துகிறது…
கூடவே அராஜகம் பிடித்த போலீஸ்காரர்களும்… அவனைத் தொடர்ந்து துரத்துகிறார்கள். இவர்கள்எல்லோரையும் தாண்டி மாணிக்கத்தின் மனசாட்சியும் அவனைத் துரத்துகிறது…
இந்தப் போராட்டத்திலிருந்து மாணிக்கம் எப்படித் தப்பித்து நேர்மையான ஒரு காரியத்தைச் செய்கிறான்என்பதுதான் பரபரப்பாக எடுக்கப்பட்டிருக்கும் திரு.மாணிக்கம் படத்தின் சாராம்சம்…
‘ராஷ்மி ராக்கெட்’ என்ற இந்திப் படத்தின் மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்த இயக்குநர் நந்தாபெரியசாமி இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார்