சமுத்திரக்கனி நடிக்கும் படம் திரு.மாணிக்கம்

நந்தா பெரியசாமி இயக்கத்தில், சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம்  திரைப்படத்தின் குரல் பதிவுஇனிதே நிறைவுற்றது. குமுளி, தேக்கடி, மூணாறு  பகுதிகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படத்தில்நடித்த  முப்பதுக்கும் மேற்பட்ட அனைத்து நடிகர்களும் வட்டார மொழியோடு தங்களது சொந்தகுரலிலேயே பேசியிருக்கிறார்கள். இந்த படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் வெறும் வசனஉச்சரிப்புகளோடு இல்லாமல் ஆன்மாவின் குரலாக பேசியிருப்பது பார்வையாளர்களை படத்தோடுஒன்றவைக்கும். சமுத்திரக்கனி மூலம் கதாநாயகியாக அறிமுகமான அனன்யா சமுத்திரக்கனிக்குஜோடியாக இந்தப் படத்தில் நடித்திருப்பது  குறிப்பிடதக்கது.**********

ராஷ்மி ராக்கெட்என்ற இந்திப் படத்தின் கதை மூலம் மொத்த இந்தியாவையும் கவனம் ஈர்த்தஇயக்குனர் நந்தா பெரியசாமி இந்தப் படத்தின் கதையை எழுதி இயக்கியுள்ளார் ஆதங்கம்ஆற்றாமைதவிப்புதடுமாற்றம் என பல வித உணர்வுகளோடு கதையின் நாயகன்மாணிக்கமாகவே சமுத்திரக்கனி வாழ்ந்திருக்கிறார். ஒரு முக்கியமான கதாப் பாத்திரத்தில் இயக்குனர்பாரதிராஜாவும், நாசரும் இதுவரை நாம் பார்க்காத தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள். இவர்களுடன்தம்பி ராமையா,  இளவரசு, சின்னி ஜெயந்த், சாம்ஸ், ஸ்ரீமன், கருணாகரன்,  இரவின் நிழல்சந்துரு..ஆகியோர் வேறொரு புதிய பரிமாணத்தில் காட்சியளிக்கிறார்கள். சீதா ராமம்படத்தின் மூலம் மொத்த இளைஞர்களையும் தன் இசையால் கவர்ந்த இசையமைப்பாளர்விஷால் சந்திரசேகர் தன் நவீன இசையால் எல்லாத் தரப்பினரையும் இந்தப் படத்தில் கவரவிருக்கிறார். பாடலாசிரியர்கள் சினேகன், சொற்கோ மற்றும் இளங்கோ கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களைஎழுதியுள்ளனர். கேரளாவைச் சேர்ந்த குமுளி, மூணாறு, மேகமலை, தேக்கடி, போன்ற எழில் கொஞ்சும் இயற்கையானபல இடங்களை இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் மைனா சுகுமார் அள்ளிக் கொண்டு வந்து படம்பிடித்திருக்கிறார். ஒவ்வொரு மனிதனின் மனசாட்சியை கேள்வி கேட்கும் அற்புதமான படைப்பாக உருவாகியுள்ளஇப்படத்தை GP ரவிக்குமார், சிந்தா கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ராஜா செந்தில்  இணைந்துதயாரித்துள்ளனர்.