சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் ராஜசேகர் இயக்கத்தில் சித்தார்த், ஆஷிகா ரங்கநாத், கருணாகரன், பாலசரவணன், லொள்ளுசபா மாறன், சஸ்டிகா, பொன்வண்ணன், ஜெயப்பிரகாஷ், ஷரத் லோகித்ஸ்வா, ரமா ஆகியோரின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “மிஸ் யூ”. சித்தார்த் ஒரு கார் விபத்தில் இரண்டு வருட நினைவுகளை இழந்து விடுகிறார். ரயில் நிலையத்தில் கருணாகரனின் நட்பு கிடைக்கிறது. அதனால் அவருடன் சித்தார்த் பெங்களூர் செல்கிறார். அங்கு ஆஷிகா ரங்கநாத்தை பார்க்கிறார். பார்த்தவுடன் காதல் கொள்கிறார். நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாமா? என்று ஆஷிகாவிடம் கேட்கிறார் சித்தார்த். இதனால் அதிச்சியடைந்த ஆஷிகா பதிலேதும் சொல்லாமல் போய்விடுகிறார். சித்தார்த் இழந்த நினைவுகளை திரும்ப பெற்றாரா?. ஆஷ்கா ரங்கநாத் யார்? என்பதுதான் இப்படத்தின் கதை. ஆரவாரமில்லாமல் ஒரு காதலை மென்மையாக திரையில் காட்டியிருக்கிறார் இயக்குநர் ராஜசேகர். மென்மையான நடிப்பிலும் ஆக்ரோஷமான நடிப்பிலும் சித்தார்த் முத்திரை பதித்திருக்கிறார். கதையின் நாயகன் இசைதான் என்று சொல்லவேண்டும். அந்த அளவிற்கு ஜிப்ரான் இசை அமைத்திருக்கிறார். அசோக்கின் வசனங்கள் மனதை தொடுக்றது. பாலசரவணன்- லொள்ளுசபா மனோகரின் நகைச்சுவை காட்சிகள் படத்தை தொய்வில்லாமல் நகர்த்தி செல்கிறது. ஆஷ்கா ரங்கநாத்தின் அமைதியான நடிப்பு பாராட்டும்படி இருக்கிறது. அமைதியான விரக்தியை முகத்தில் நயம்பட படரவிட்டிருக்கிறார் ஆஷிகா. மலரை தென்றல் தழுவதைப்போல் ஆஷிகாவை தழுவுகிறார் சித்தார்த். குடும்பத்தினருடன் சென்று பார்க்க வேண்டிய படத்தை தந்திருக்கும் இயக்குநரை பாராட்ட வேண்டும்.