சென்னை பெருநகர காவல்துறையில், பெண்கள் உதவி மையம் எண்.1091, முதியோர்உதவி மையம் எண்.1253 மற்றும் குழந்தைகள் உதவி மையம் 1098 ஆகியவை செயல்பட்டுக்கொண்டு, பெண்கள் மற்றும் முதியோர் குறித்து வரும் உதவி அழைப்புகளுக்கு காவல் குழுவினர் மற்றும் காவல் உதவி மையத்தில் அங்கம் வகிக்கும் அரசு மற்றும் அரசு சாராதன்னார்வ தொண்டு அமைப்பினருடன் (NGO) ஒருங்கிணைந்து செயல்பட்டு மீட்புபணியில் ஈடுபட்டு, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மேலும், சென்னை பெருநகர காவல் துறையில் கடந்த 21.04.2021 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களால் “காவல் கரங்கள்” என்ற அமைப்பு தொடங்கப்பட்டு, சென்னைபெருநகரில் ஆதரவில்லாமல் சுற்றி திரியும் மனநிலை மற்றும் உடல் நிலைபாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள், பெண்கள், மற்றும் குழந்தைகளையும் கண்டறிந்து உரியபாதுகாப்புடன் அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வ தொண்டு அமைப்பினர் (NGOs) மூலம் மீட்டுதேவைபடுவோருக்கு சிகிச்சை அளித்தும் அரசு மற்றும் தனியார் இல்லங்களில் தங்கவைத்தும், நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக. ஶ்ரீராம் குழுமத்தினர் மற்றும் அதுல்யா நிறுவனத்தினர்முதியோர் நலன் மற்றும் பராமரிப்புக்கு, சென்னை பெருநகர காவல்துறை உதவி மையத்தில், 2004ம் ஆண்டு முதல் அங்கம் வகித்து, காவல்துறையினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டுவரும் Help Age India என்ற முதியோர் நல அமைப்பினருக்கு (Elders help) பொருளாதாரரீதியாக உதவ முன்வந்தனர்.
அதன்பேரில், ஶ்ரீராம் குழுமத்தினர் மற்றும் அதுல்யா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கார்த்திக் நாராயணன் இணைந்து வழங்கிய ரூ.4,50,000/- க்கான காசோலைகளை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப. அவர்கள் இன்று (05.10.2021) Help Age India அமைப்பின் தமிழகத்தின் இயக்குநர் சிவகுமார் என்பவரிடம் வழங்கினார். உடன் சென்னை பெருநகர காவல் கூடுதல்ஆணையாளர் (தலைமையிடம்) முனைவர் ஜெ.லோகநாதன்,இ.கா.ப., காவல் உதவி மையபொறுப்பு காவல் ஆய்வாளர் மற்றும் அதுல்யா நிறுவனத்தின் பெண் நிர்வாகிகள் உடனிருந்தனர்.