மெரினா கடற்கரையில் நடந்த” காவலர் வீர வணக்க வாரம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பணியின் போதும், கொரோனா பேரிடரில் முன்கள பணியாற்றி உயிர் நீத்த காவலர்களின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர்-21 அன்று காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. காவலர் வீர வணக்க நாள் குறித்து பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரிமாணவர்களும் அறிந்திடும் வண்ணம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டார். அதன்பேரில்,  நேற்று(21.10.2021) முதல் 31.10.2021 வரையிலான 11 நாட்கள் சென்னை பெருநகரில் பல்வேறு இடங்களில், சென்னை பெருநகர காவல்துறை சார்பில், காவலர் வீர வணக் ாரமாக (Police Commemoration Week) கடைபிடிக்கப்பட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் காவல் துறை சார்பாக  நடத்தப்பட்டு வருகிறது. அதன்பேரில், பணியின்போது உயிர் தியாகம் செய்த காவல் துறையினரின்புகைப்படங்களுக்கு அஞ்சலி செலுத்துதல், காவல்துறையினரின் பணிகள் மற்றும் வீரதீர செயல்கள்புரிந்து உயிர் தியாகம் செய்த காவல்துறையினர் குறித்த கண்காட்சியகங்கள், நாடகங்கள், காவல் வாத்திய குழுவினரின் இசை நிகழ்ச்சிகள், மினி மாரத்தான் போட்டிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள், பேச்சுப் போட்டிகள், ஓவிய போட்டிகள், எழுத்து போட்டிகள், சைக்கிள் பேரணி என பல்வேறுவிழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, இன்ற (22.10.2021) மாலை,  மெரினா கடற்கரை, உழைப்பாளர் சிலைஅருகில் நடந்த காவலர் வீர வணக்க வாரம் நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்கள் கலந்து கொண்டு சென்னை பெருநகர காவல் துறையில்பணியின்போது உயிர் தியாகம் செய்த காவலர்கள் மற்றும் கொரோனா பேரிடர் காலத்தில், பொதுமக்களின் உயிர் காக்கவும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், முன்களபணியாளர்ளாக பணி செய்து, உயிர் தியாகம் செய்த காவலர்களின் திருவுருவ படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர்திரு.ககன்தீப்சிங் பேடி, இ.ஆ.ப, ஓமந்தூரர் அரசு பல்நோக்கு மருத்துவமனை டீன் டாக்டர்திருமதி.ஜெயந்தி, செஸ் விளையாட்டு வீரர் திரு.விஸ்வநாதன் ஆனந்த்,  ிரைப்பட இயக்குனர்திரு.P.வாசு ஆகியோர் பணியின் போது உயிர் தியாகம் செய்த காவலர்களின் திருவுரு படங்களுக்குமலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதனை தொடர்நது பொதுமக்களும் உயிர் தியாகம் செய்தகாவலர்களின் திருவுருவ படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் சென்னைபெருநகர காவல் துறையின் வாத்திய இசைக்குழுவினரின் (Police Band Team) இசை நிகழ்ச்சியும்நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காவல் கூடுதல் ஆணையாளர்கள் திரு.J.லோகநாதன், இ.கா.ப,(தலைமையிடம்) திரு.T.செந்தில்குமார், இ.கா.ப ( வடக்கு) மருத்துவர் N.கண்ணன், இ.கா.ப(தெற்கு) இணை ஆணையாளர் திரு.S.ராஜேந்திரன், இ.கா.ப (கிழக்கு), துணை ஆணையாளர்கள், காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல, இன்று (22.10.2021) அம்பத்தூர் காவல் மாவட்டம், T-16 நசரத்பேட்டை காவல்நிலைய வளாகத்தில், காவலர் வீர வணக்க நாளை முன்னிட்டு, கொரோனா பேரிடர் காலத்தில் முன்களபணியாற்றி உயிர் நீத்த T-16 நசரத்பேட்டை காவல் நிலைய தலைமைக்காவலர் திரு.கோபிநாத், (த.கா.35247) திருவுருவ படத்திற்கு பூந்தமல்லி சரக காவல் உதவி ஆணையாளர் தலைமையில்மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நசரத்பேட்டை, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காவல்துறை பணிகள் குறித்தும், காவலர் வீர வணக்க நாள் குறித்தும்எடுத்துரைக்கப்பட்டது.

மாதவரம் காவல் மாவட்டம , M-1 மாதவரம்  காவல் நிலைய பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி  மாணவர்களுக்கு,  நாட்டை காப்பதில் காவலர்களின் பங்கு என்ற தலைப்பில் தமிழ்மற்றும் ஆங்கில பேச்சுப்போட்டி நடத்தப்பட்டது. மாதவம் சரக உதவி ஆணையாளர் அவர்கள் கலந்துகொண்டு காவல் துறையினரின் பணிகள் சிறப்புகள், தியகாங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும்பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துக்கள்தெரிவித்தார்.

அடையாறு காவல் மாவட்டம்,  J-13 தரமணி  காவல் நிலைய பகுதியில் நடந்த காவலர் வீரவணக்க நாள் சைக்கிள் பேரணியில் காவலர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.புனித தோமையர் மலை மாவட்டம், S-16 பெரும்பாக்கம் காவல் நிலைய வளாகத்தில்,பணியின் போது மரணமடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.M.D.அஸ்லாம் திருவுருவ படத்திற்குபெரும்பாக்கம் காவல் ஆய்வாளர் தலைமையில் காவல் ஆளிநர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.தி.நகர் காவல் மாவட்டம், R-3  அசோக்நகர் பகுதியில்  கொரோனா பேரிடர் காலத்தில் முன்களபணியாற்றி உயிர் நீத்த சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.ரவி அவர்களின் திருவுருவபடத்திற்கு காவல் ஆய்வாளர் தலைமையில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

இதே போன்று நாளை (23.10.2021) சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட, மாதவரம்காவல் மாவட்டம் புழல், புளியந்தோப்பு காவல் மாவட்டம், புளியந்தோப்பு, புனித தோமையர் மலைகாவல் மாவட்டம், தாம்பரம் , தி.நகர் காவல் மாவட்டம், வடபழனி ஆகிய பகுதிகளில் நாட்டைகாப்பதில் காவலர்களின் பங்கு என்ற தலைப்பில் மாணவ மாணவிகளுக்கு பேச்சு போட்டிகளும்,  அடையாறு காவல் மாவட்டம், நீலாங்கரை பகுதியில்  காவல் துறையின் சிறப்புகள் குறித்து நாடகம்மற்றும் கலை நிகழ்ச்சிகளும்,   திருவல்லிக்கேணி காவல் மாவட்டம் ,  மெரினா, கண்ணகி சிலைஅருகே  காவல் வாத்திய இசை குழுவின் (Police Band Team) இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.