பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடி, காவல்துறையின் பெருமைகள் குறித்து எடுத்துரைத்தார் ஆணையர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்உத்தரவிபேரில், 21.10.2021 முதல் 31.10.2021 வரையிலான 11 நாட்கள் காவலர் வீர வணக்கவிழிப்புணர்வு வாரமாக (Police Commemoration Awareness Week) கடைபிடிக்கப்பட்டு, சென்னைபெருநகர காவல்துறை சார்பில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக இன்று (27.10.2021) காலை, அமைந்தகரை, அண்ணா வளைவு அருகேபோக்குவரத்து காவல் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டு, , போக்குவரத்து காவல் ஆளிநர்களின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து இன்று (27.10.2021) மாலை, காவலர் வீர வணக்க விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, எழும்பூர் பழைய காவல் ஆணையாளர் வளாகத்திலுள்ள தமிழக காவல் அருங்காட்சியகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். காவல் அருங்காட்சியகத்தை பார்வையிடவந்திருந்த எழும்பூர் மாநில பெண்கள் உயர்நிலை பள்ளி, மாதவரம் பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும்கண்ணகிநகர் சிறார் மன்ற மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, அருங்காட்சியகத்தில்வைத்திருந்த காவல்துறையினர் பயன்படுத்திய வாகனங்கள், சீருடைகள், ஆயுதங்கள், பொருட்கள்குறித்தும், காவல்துறையின் தொன்மை மற்றும் பெருமைகள் குறித்தும் எடுத்துரைத்து, மாணவ, மாணவிகளுக்கு சாக்லேட் மற்றும் பேனாக்கள் வழங்கினார்பின்னர், காவலர் வீர வணக்க வாரத்தை முன்னிட்டு, பணியின்போது இறந்த காவல் அதிகாரிகள்மற்றும் ஆளிநர்கள் குறித்தும் அவர்களது தியாகங்கள் குறித்தும் எடுத்துரைத்து, மாணவ,மாணவிகளின்சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 175 மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்இந்நிகழ்ச்சியில், சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் முனைவர் J.லோகநாதன், இ.கா.ப., இணை ஆணையாளர்கள் திரு.S.ராஜேந்திரன், இ.கா.ப., (கிழக்கு மண்டலம்), திருமதி.B.சாமூண்டீஸ்வரி, இ.கா.ப., (தலைமையிடம்), துணை ஆணையாளர்கள் திரு.P.பகலவன், இ.கா.ப., (திருவல்லிக்கேணி), மருத்துவர் L.பாலாஜி சரவணன் (தலைமையிடம்), திரு.K.செளந்தராஜன்(ஆயுதப்படை), காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.