காவலர்கள் குறை தீர்க்கும் நாள்

சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களின் துறைரீதியான குறைகளை களைய உங்கள் துறையில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் காவலர்கள்குறை தீர்க்கும் முகாம், சென்னை பெருநகர காவல் ஆணையாளர்  சங்கர்ஜிவால், இ.கா.ப  தலைமையில், நேற்று (02.10.2021) சென்னை, எழும்பூர், இராஜரத்தினம்விளையாட்டரங்களில் நடைபெற்றது. 

இம்முகாமில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப சென்னை பெருநகர காவல் துறையில் பணிபுரியும் காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களிடமிருந்து 1,359 மனுக்களை பெற்றார். காவல் ஆணையாளர் அவர்கள் மாலை 3.00 மணிமுதல் இரவு 10.30 மணிவரை தொடர்ந்து 7 ½ மணி நேரம் நேரடியாக குறைகளை கேட்டறிந்துமனுக்களை பெற்றார். இம்முகாமில் பணி இடமாறுதல், தண்டனைக்குறைப்பு, ஊதிய முரண்பாடுகளைதல், காவலர் குடியிருப்பு வேண்டுதல், காவலர் சேமநல நிதியிலிருந்து மருத்துவ உதவி தொகைபெற்று தர கோருதல் உள்ளிட்ட 1,359 மனுக்களை பெற்று அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்ககாவல் ஆணையாளர் அவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.  03.10.2021 காலை இராஜரத்தினம் விளையாட்டரங்கில், 2வது நாளாக தொடர்ந்துநடைபெற்ற உங்கள் துறையில் முதலமைச்சர்திட்டத்தின் கீழ் காவலர்கள் குறை தீர்க்கும்முகாமில்  சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.பகலந்துகொண்டு, காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து, அவர்களிடமிருந்து 195 மனுக்களை பெற்று, அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். காவல் ஆணையாளர் காலை 11.30 மணி முதல் மதியம் 03.30 மணி வரை என 4 மணி நேரங்கள்தொடர்ந்து காவல் ஆளிநர்களிடமிருந்து மனுக்களை பெற்றுள்ளார்உங்கள் துறையில் முதலமைச்சர்திட்டத்தின் கீழ் 2 நாட்கள் நடைபெற்ற காவலர்கள் குறை தீர்க்கும் முகாமில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து  மொத்தம் 1,554 மனுக்கள் பெற்றுள்ளார். 

இம்முகாமில், கூடுதல் ஆணையாளர் முனைவர் J.லோகநாதன், இ.கா.ப (தலைமையிடம்), துணைஆணையாளர்கள் L.பாலாஜிசரவணன்,   (தலைமையிடம்), திரு.K.சௌந்தராஜன் (ஆயுதப்படை), R.ரவிச்சந்திரன் (ஆயுதப்படை) மற்றும் காவல் அதிகாரிகள  கலந்து கொண்டனர்.