சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப உத்தரவின் பேரில், சென்னையில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும்மழை விபத்துகளிலிருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், அவரச அழைப்பிற்குஇடர் ஏற்பட்ட இடம் தேடி உதவிகள் செய்ய வசதியாக 13 காவலர் பேரிடர் மீட்புகுழுக்கள் (Tamil Nadu State Disaster Response Force) அமைக்கப்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர்கள் தலைமையில் ஆயுதப்படை காவலர்கள் கொண்டுஅமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் நீச்சல் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில்அனுபவம் உள்ள 10 காவலர்கள் உள்ளனர். 12 காவல் மாவட்டங்களுக்கும் ஒருசிறப்பு காவலர் பேரிடர் மீட்பு குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 1 மீட்பு குழுவினர் சென்னை ராஜரத்தினம் ஆயுதப்படை மைதானத்தில் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப இன்று (07.11.2021) காலை எழும்பூர், ராஜரத்தினம் மைதான வளாகத்தில்காவல் துறை பேரிடர் மீட்பு (Tamil Nadu State Disaster Response Force)குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களை (Equipments) பார்வையிட்டுமீட்பு குழுவினருக்கு தகுந்த அறிவுரைகள் வழங்கினார். இந்நிகழ்வின்போது, சென்னை பெருநகர ஆயுதப்படை துணைஆணையாளர்கள் சௌந்தர்ராஜன், திரு.கோபால் (மோட்டார் வாகனப்பிரிவு) மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.