வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில்பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால்பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவும், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியதேவைகளுக்கு செல்லவும், சாலைகளில் போக்குவரத்து சீராக செல்லவும் கடினமாகஉள்ளது. ஆகவே, மழை வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளபொதுமக்களை பாதுகாக்கவும், மீட்பு பணியில் ஈடுபடவும், சென்னை பெருநகர காவல்ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், சென்னைபெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய 13 சென்னைபெருநகர காவல் பேரிடர் மீட்பு குழுக்கள் (Greater Chennai Police Rescue Team) அமைக்கப்பட்டு, 12 காவல் மாவட்டங்களிலும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்பத்தூர் காவல் மாவட்டம்
T-1 அம்பத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், அம்பத்தூரில், மேனாம்பேடு, மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை நீரால் சூழ்ந்துள்ளபகுதிகளுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளைசெய்து வருகின்றனர். மேலும் அங்கு குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரைகாவல் குழுவினர் மோட்டார் மூலம் வெளியேற்றி சீரான போக்குவரத்துக்கு வழிவகைசெய்துள்ளனர். அத்துடன், அம்பத்தூர், மேனாம்பேடு பகுதிகளில் உணவு பொட்டலங்கள்மற்றும் குடிநீர் வழங்கினர். இதே போல, T-6 ஆவடி காவல் நிலைய எல்லைக்குட்பட்டஅம்பேத்கர் நகர், பருத்திப்பட்டு ஆகிய பகுதிகள், T-15 SRMC காவல் நிலையஎல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் சுற்றுப்புற பகுதிளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில்தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் அகற்றியும், அவர்களுக்கு உணவு மற்றும் குடிநீர்பாட்டில்கள் வழங்கியும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டம்
வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில், H-1 வண்ணாரப்பேட்டை , H-6 ஆர்.கே.நகர், H-5 புது வண்ணாரப்பேட்டை, H-8 திருவொற்றியூர் ஆகிய காவல் நிலையஎல்லைக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்த குடியிருப்பு பகுதிகளுக்கு காவல்ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விரைந்து சென்று, மீட்பு பணியில்ஈடுபட்டனர். அங்கு தெருக்களில் விழுந்த மரங்களை அப்புறப்படுத்தியும், மோட்டார்கள் மூலம் தெருக்களில் தேங்கிய மழைநீர் அகற்றியும், மாநகராட்சிஊழியர்களுடன் ஒருங்கிணைந்து, குப்பைகளை அகற்றி கால்வாய்களில் தேங்கியமழைநீர் செல்வதற்கும் வழி வகை செய்தனர்.
பூக்கடை காவல் மாவட்டம்
பூக்கடை காவல் மாவட்டத்தில் உள்ள C-1 பூக்கடை, C-2 யானைகவு, C-3 ஏழுகிணறு, B-1 வடக்கு கடற்கரை, B-2 எஸ்பிளனேடு ஆகிய காவல் நிலையஎல்லைக்குட்பட்ட பகுதிகளில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் காவல் ஆய்வாளர்கள்தலைமையிலான காவல் குழுவினர் நேரில் சென்று தேங்கியுள்ள மழைநீரை மோட்டார்மூலமும், மாநகராட்சி ஊழியர்களுடன் ஒருங்கிணைந்தும் வெளியேற்றி போக்குவரத்துசீர் செய்து வருகின்றனர். மேலும், B-3 கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர், கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் விழுந்தமரங்களை அகற்றினர். மேலும், சிறிய ஜேசிபி இயந்திரம் மூலம் பாதை அமைத்து, தேங்கிய மழைநீரை வெளியேற்றி, போக்குவரத்து சீர் செய்தனர்