வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 3நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில்பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. இதனால்பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே வரவும், மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசியதேவைகளுக்கு செல்லவும், சாலைகளில் போக்குவரத்து சீராக செல்லவும் கடினமாகஉள்ளது. ஆகவே, மழை வெள்ள நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளபொதுமக்களை பாதுகாக்கவும், மீட்பு பணியில் ஈடுபடவும், சென்னை பெருநகர காவல்ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், சென்னைபெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய 13 சென்னைபெருநகர காவல் பேரிடர் மீட்பு குழுக்கள் (Greater Chennai Police Rescue Team) அமைக்கப்பட்டு, 12 காவல் மாவட்டங்களிலும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பூக்கடை காவல் மாவட்டம்
C-1 பூக்கடை காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், பூக்கடைமற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மழை நீரால் சூழ்ந்துள்ள பகுதிகளுக்கு சென்றுபொதுமக்களை சந்தித்து, அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துவருகின்றனர். மேலும் N.S.C போஸ் ரோட்டில் கழிவு நீர் கால்வாயில் ஏற்பட்டைஅடைப்பை காவல் குழுவினர் சரி செய்து, சாலையில் தேங்கிய மழை நீர் வடியவழிவகை செய்தனர். C-3 ஏழுகிணறு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலானகாவல் குழுவினர் கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பில் சாலையில் தேங்கிய மழைநீர் வடிய வழிவகை செய்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
புளியந்தோப்பு காவல் மாவட்டம்
K-5 பெரவள்ளூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட G.K.M காலனி, கருணாநிதிசாலையில் வசிக்கும் முதியவர் ஒருவர் கனமழையின் காரணமாக வீட்டை விட்டுவெளியே வர முடியாத காரணத்தினால் பெரவள்ளூர் காவல் நிலையத்தை தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளார். பெரவள்ளூர் போலீசார் விரைந்து சென்று பால்பாக்கெட் உள்ளிட்ட அத்தியவாசிய பொருட்களை வாங்கி முதியவர் வீட்டிற்கு கொண்டுகொடுத்து உதவி செய்தனர்.
மைலாப்பூர் காவல் மாவட்டம்
J-4 கோட்டூர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்ஶ்ரீநகர் காலனி, தெற்கு மாடவீதியில் சாலையில் மழையின் காரணமாக விழுந்தமரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர். E-1 மைலாப்பூர் காவல்நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மைலாப்பூர் காவல் நிலையஎல்லைக்குட்பட்ட பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உணவுபொட்டலங்களை வழங்கினர்.
புனித தோமையர் மலை மாவட்டம்
சேலையூர் உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினர் S-14 பீர்க்கன்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடிச்சூர், அமுதம் நகர் பகுதியில்தேங்கியுள்ள மழைநீரை மோட்டார் மூலம் அகற்றியும், கால்வாயில் தேங்கியுள்ளசெடிகள் மற்றும் குப்பைகளை ஜெ.சி.பி இயந்திரங்கள் மூலம் அகற்றி நீர்வழித்தடத்தை சீர் செய்தனர். S-11 தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் தாம்பரம், முடிச்சூர் ரோடு, மற்றும் கக்கன் ரோட்டில்தேங்கியுள்ள மழை நீரை அகற்றியும், மழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குஉணவு பொட்டலங்களை வழங்கி உதவி செய்தனர்.