சென்னை நகர காவல் ஆணையர் சங்கர் ஜியால் வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 3நாட்களாக பெய்து வரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில்பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. சென்னைபெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய 13 சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு குழுக்கள் (Greater Chennai Police Rescue Team) அமைக்கப்பட்டு, 12 காவல் மாவட்டங்களிலும் சட்டம் ஒழுங்கு காவல்குழுவினருடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப.,காவல் அதிகாரிகளுடன் 10.11.2021 அன்று  பூந்தமல்லிநெடுஞ்சாலை, G-3 கீழ்பாக்கம் காவல் நிலையம் பின்புறமுள்ள, கீழ்பாக்கம் காவலர்குடியிருப்பு வளாகத்திற்கு சென்று, அங்குள்ள காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்மற்றும் காவலர் குடியிருப்புகளை பார்வையிட்டார். மேலும், அங்கு தேங்கியுள்ள மழைநீர்வெளியேற்ற உத்தரவிட்டதின்பேரில், மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டுவருகிறது. மேலும், அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளகழிவுகளை அகற்ற உத்தரவிட்டு, காவல் குடும்பத்தினரிடம் குறைகளை கேட்டறிந்தார்.மேலும், காவலர் குடும்பத்தினருக்கு உணவு பொட்டலங்கள், ரொட்டி, குடிநீர் பாட்டில்கள்மற்றும் Emergency Light  உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்காவல் ஆணையாளர் அவர்கள், காவலர் குடும்பத்தினர் தெரிவித்த குறைகளைவிரைந்து நடவடிக்கை எடுக்கும்படி உறுதியளித்து, துரித நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்நிகழ்வின்போது, கூடுதல் காவல் ஆணையாளர் (தெற்கு) மருத்துவர்N.கண்ணன், இ.கா.ப., காவல் இணை ஆணையாளர்  S.ராஜேந்திரன், இ.கா.ப., கீழ்பாக்கம் துணை ஆணையாளர்  R.கார்த்திக்கேயன், இ.கா.ப., மற்றும் காவல் அதிகாரிகள் உடனிருந்தனர்.