வடகிழக்கு பருவமழையின் காரணமாக, சென்னை பெருநகரில் கடந்த 5 நாட்களாக பெய்துவரும் தொடர்மழை காரணமாக, சென்னை பெருநகரில் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள், தெருக்களில் மழைநீர் தேங்கியது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர்ஜிவால், இ.கா.ப அவர்கள் உத்தரவின்பேரில், சென்னை பெருநகர காவல் ஆயுதப்படை அதிகாரிகள் மற்றும்ஆளிநர்கள் அடங்கிய 13 சென்னை பெருநகர காவல் பேரிடர் மீட்பு குழுக்கள் (Greater Chennai Police Rescue Team) அமைக்கப்பட்டு, 12 காவல் மாவட்டங்களிலும் சட்டம் ஒழுங்கு காவல்குழுவினருடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (11.11.2021), மாலை 1.சூளை சந்திப்பு, 2.பெரம்பூர் பேரக்ஸ் ரோடு, 3.ஓட்டேரி 4.தேனாம்பேட்டை 5.பெருங்குடி சந்திப்பு 6.அக்கரை சந்திப்பு 7. அண்ணா நகர் வ.உ.சிநகர் உள்ளிட்ட மேலும் சில சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளுக்குசென்று ஆய்வு செய்து காவல் ஆளிநர்கள், காவல் மீட்பு குழுவினர் (Police Recue Team) செய்து வரும்மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் காவல் குழுவினருடன்உரையாடி வாழ்த்துக்கள் தெரிவித்து T-சர்ட்டுகள் வழங்கி உற்சாகப்படுத்தினார்.
மேலும் கடந்த 08.11.2021 அன்று G-5 தலைமைச்செயலக காலனி காவல் நிலைய எல்லையில் கூவம்ஆற்றில் அடித்து செல்லப்பட்ட ஏழுமலை என்பவரை காப்பாற்றிய காவல் மீட்பு குழுவினர் (Police Rescue Team) , வேப்பேரி பகுதியில் உள்ள Ab சாலையில் 2 வயது குழந்தையை மீட்டு உரிய நேரத்தில்மருத்துவமனையில் சேர்த்த G-1 வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு.கண்ணன் தலைமையிலானகாவல் குழுவினர், எழும்பூர் பகுதியில் P.H சாலையில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர்செய்த F-2 எழும்பூர் காவல் நிலைய ஆய்வாளர் திரு.ஜானி செல்லப்பா தலைமையிலான காவல்குழுவினர், E-3 தேனாம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 70 வயது முதியவரைமீட்ட தேனாம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் திரு.முரளி தலைமையிலான காவல் குழுவினர்,நேற்று (10.11.2021) ஓட்டேரி பகுதியில் 15 வயது சிறுவனை மீட்ட ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர்திரு.கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான காவல் குழுவினர், இன்று (11.11.2021)K-6 T.P. சத்திரம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கல்லறைத் தோட்டத்தில் மயங்கிய நிலையில் கிடந்த மயான ஊழியர்உதயகுமார் என்பவரை மீட்ட T.P சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.ராஜேஸ்வரிதலைமையிலான காவல் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார். மேலும் நேற்று (10.11.2021) தொடர் மழை மற்றும் பலத்த காற்றினால், J-12 கானாத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்டமுட்டுக்காடு, கரிகாட்டுகுப்பம் கடற்கரையோரம் வசித்து வந்த தற்காலிக வீடு பாதிப்படைந்ததால், அவ்வீட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு நபர்கள் மற்றும் இரண்டு குழந்தைகளைமீட்டு, காவல் குழுவினரால் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டனர் அவர்களையும் காவல்ஆணையாளர் அவர்கள் சந்தித்து அத்தியாவாசிய பொருட்களை வழங்கினார். J-9 துரைப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வெள்ள நிவாரண முகாமில் முதல் பிறந்தநாள் கொண்டாடிய குழந்தையின் பெற்றோரிடம் கேக் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.