சிறப்பாக பணிபுரிந்த அண்ணாநகர் சரக காவல் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆளிநர்களை நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்.

சென்னையின் பல்வேறு பகுதியில் நான்கு சக்கர வாகனங்களை திருடிய 2 பழைய குற்றவாளிகள் கைது. சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 9 லோடு வாகனங்கள்மற்றும் 2 கார்கள் உட்பட 11 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல்.

சென்னை, அரும்பாக்கம், கண்ணப்பன் நகர், ராஜீவ் காந்தி தெருவில் வசித்து வரும் நவீன்ராஜ், வ/25, த/பெ.அசோக்குமார் என்பவர் கடந்த 11.08.2021 அன்று இரவு தனது Ashok Leyland Dost என்ற 4 சக்கர லோடு வாகனத்தை அரும்பாக்கம், சக்திநகர் மெயின் ரோட்டில் நிறுத்திவிட்டு மறுநாள்12.08.2021 பார்த்தபோது, மேற்படி வாகனத்தை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்துநவீன்ராஜ், K-8 அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்துவிசாரணை மேற்கொள்ளப்பட்டதுஅண்ணா நகர் சரக உதவி ஆணையாளர் திரு.அகஸ்டின்பால் சுதாகர் அவர்கள் தலைமையில்K-8 அரும்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.R.D.விவேகானந்தன், உதவிஆய்வாளர்கள் திரு.R.நிர்மல்ராஜ்,  திரு.A.பன்னீர் செல்வம், தலைமைக் காவலர்கள் திரு.T.சரவணன், (த.கா.29621), திரு.A.ரவிக்குமார் (த.கா.19951), முதல் நிலைக்காவலர்  திரு.N.விஜயகுமார், (மு.நி.கா.32790), இரண்டாம் நிலைக்காவலர்கள் திரு.அருண்பிரசாத் (கா.எண்.41627), திரு.M.முகமது லாவுதீன் (கா.எண்.56884) ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல் குழுவினர்சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்தும், சம்பவயிடத்தின் அருகில் பொருத்தப்பட்டிருந்தசிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தும், குற்றவாளிகளின் அடையாளங்களை வைத்து, தீவிரதேடுதலில் ஈடுபட்டு, மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகளான 1.அகஸ்டின் ஈடன்இன்பராஜ், வ/48, த/பெ.தங்கராஜ், முழகுமோடு போஸ்ட், கன்னியாகுமரி மாவட்டம், 2.தங்க பாண்டியன், வ/31, த/பெ.மணிமுத்து, பாரதிபுரம், கருப்பாயூரணி போஸ்ட், மதுரை மாவட்டம் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ரூ.1 கோடி  மதிப்புள்ள  7 Ashok Leyland Dost,  1 Tata Ace Gold,  1 Tata Lorry என  9 லோடு வாகனங்கள் மற்றும்  2  Tata Sumo கார்கள்  எனமொத்தம் 11 நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் குற்றவாளிஅகஸ்டின் ஈடன் இன்பராஜ் என்பவர் சாலையில் நிறுத்தியிருக்கும் நான்கு சக்கர லோடு வாகனங்களைலாவகமாக திருடிச் செல்வதும், மற்றொரு குற்றவாளியான தங்கபாண்டி என்பவர் திருடிய நான்கு சக்கரவாகனங்களை குறைந்த விலைக்கு விற்று மேற்படி இருவரும் பணம் சம்பாதித்து வந்ததும்தெரியவந்தது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட அகஸ்டின் ஈடன் இன்பராஜ் மீதுதிருட்டு, வழிப்பறி, வீடுபுகுந்து திருடுதல் உட்பட 31 குற்ற வழக்குகள் உள்ளதும், தங்க பாண்டியன் மீது12 திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

2. அண்ணாசதுக்கம் பகுதியில், வங்கி ஏடிஎம் காவலாளியை கொலை செய்த குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த ரவி, வ/42, என்பவர் சென்னை, எழிலகம் வளாகத்திலுள்ளஆக்சிஸ் வங்கி ஏ.டி.எம் மையத்தில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.  கடந்த 18.08.2007 அன்றுஅதிகாலை ரவி பணியிலிருந்த போது, அங்கு பணம் எடுக்க வந்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த வாலிபர்ஒருவர் மேற்படி ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுத்தபோது, பணம் வராததால் ஆத்திரமடைந்துஏ.டி.எம் இயந்திரத்தை சேதப்படுத்த முயன்றுள்ளார்.  இதனை பார்த்த காவலாளி ரவி தட்டிக்கேட்டபோது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த வெளிமாநில வாலிபர் காவலாளி ரவியைதான் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றார். இது குறித்து  D-6 அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, காவலாளி ரவியை கொலை செய்துதப்பிய டைய்த்தோவோலி  ராகோ, வ/26, த/பெ.வெனிசா ராகோ, கோகிமா, நாகலாந்து மாநிலம்என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

​​ இவ்வழக்கு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில்,   D-6 அண்ணா சதுக்கம்காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற பணிகளை மேற்கொண்டு வந்த முதல்நிலைக் காவலர்திரு.P.இளவரசன் (மு.நி.கா.39459) ஆகியோர் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், வழக்கு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக கண்காணித்து வந்தநிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின் படி வழக்கு விசாரணை முடிவடைந்து 22.10.2021 அன்றுதீர்ப்பு வழங்கப்பட்டதுஎதிரி டைய்த்தோவோலி ராகோ மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், டைய்த்தோவோலிராகோவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல்  சிறை தண்டனை விதித்து  கனம் 5வது கூடுதல் அமர்வுநீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.

3. செம்பியம் பகுதியில் கோயில் வெளியே சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த                  89 வயதுமூதாட்டியின் சேலையில் பற்றிய தீயை அணைத்த போக்குவரத்து தலைமைக் காவலருக்கு பாராட்டு.

சென்னை, கொளத்தூரைச் சேர்ந்த அம்சா, பெ/வ.89, க/பெ.கோதண்டராமன் என்பவர் கடந்த23.10.2021 அன்று காலை சுமார் 09.00 மணியளவில் பெரம்பூர், அகரம், SRP கோயில் தெரு மற்றும்பேப்பர் மில்ஸ் ரோடு சந்திப்பில் உள்ள கிருஷ்ணர் கோயிலின் வாசலில் உள்ள விநாயகர் கோயில்முன்பு நின்று சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தபோது, அருகில் எரிந்து கொண்டிருந்த விளக்கிலிருந்துஅம்சாவின் சேலையில் தீப்பிடித்து எரிந்தது. ப்போது அருகில் போக்குவரத்து காவல் பணியிலிருந்தK-1 செம்பியம் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.P.செந்தில்குமார்(த.கா.24201) என்பவர் இதனை கண்டு உடனே சுதாரித்து, மூதாட்டி அம்சாவை சேலையில் பற்றியதீயை கையால் அணைத்தும், அவரை தெருவில் உருள வைத்தும் தீயை அணைத்து, பெரியஅசம்பாவிதம் நிகழாமல் தடுத்து, மூதாட்டியின் உயிரை காப்பாற்றினார்சென்னையில் பல்வேறு பகுதிகளில் 4 சக்கர வாகனங்களை திருடிய   2 குற்றவாளிகளை கைது செய்து ரூ.1 கோடி மதிப்புள்ள  11  நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல்செய்த அண்ணா நகர் சரக உதவி ஆணையாளர் திரு.அகஸ்டின் பால் சுதாகர்  K-8 அரும்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு.R.D.விவேகானந்தன், உதவி ஆய்வாளர்கள்திரு.R.நிர்மல் ராஜ்,  திரு.A.பன்னீர்செல்வம், தலைமைக் காவலர்கள் திரு.T.சரவணன், (த.கா.29621), திரு.A.ரவிக்குமார் (த.கா.19951), முதல் நிலைக்காவலர் திரு.N.விஜயகுமார், (மு.நி.கா.32790), இரண்டாம் நிலைக்காவலர்கள் திரு.அருண்பிரசாத் (கா.எண்.41627), திரு திரு.M.முகமது சலாவுதீன்(கா.எண்.56884) அண்ணாசதுக்கம் கொலை குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க சீரிய முறையில் பணிசெய்த D-6 அண்ணாசதுக்கம் காவல் நிலைய முதல்நிலைக் காவலர் திரு.P.இளவரசன்(மு.நி.கா.39459), துரிதமாக செயல்பட்டு மூதாட்டியின் சேலையில் பற்றிய தீயை அணைத்த K-1 செம்பியம் போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர் திரு.P.செந்தில்குமார் (த.கா.24201)சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று(15.11.2021) நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.