மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் பெற்று தந்த காவல் ஆய்வாளர் மற்றும் பெண் தலைமைக்காவலருக்கு பாராட்டு.

கடந்த 14.11.2018 அன்று சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல்மாவட்டத்தில் வசிக்கும் 11 வயது சிறுமிய ிரட்டி பாலியல் தொந்தரவு செய்ததாககொடுத்த புகாரின் பேரில் W-22 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்போக்சோ சட்டப்பிரிவுகள் உள்பட 3 சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, எதிரி ரவி, வ/58, த/பெ.பழனி, மயிலாப்பூர், சென்னை என்பவரை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்குஉட்படுத்தினர்இவ்வழக்கு தொடர்பான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ளபோக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,                        W-22 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பணிபுரிந்த திருமதி.கமலாதேவி(தற்போது  கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர்), நீதிமன்ற அலுவல்பணிபுரியும் பெண் தலைமைக்காவலர் திருமதி.J.எட்டியம்மாள் (த.கா.25608) மற்றும் காவல்குழுவினர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தும், முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும்வழக்கு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்து வந்த நிலையில், நீதிமன்றநடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த 30.11.2021 இவ்வழக்கில்தீர்ப்பு வழங்கப்பட்டது.மேற்படி வழக்கில் எதிரி ரவி மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி ரவிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.15,000/- அபராதமும், அபராதம் கட்ட தவறினால் மேலும் 4 மாதங்கள் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டும்என கனம் போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கனம் நீதிபதி அவர்கள்தீர்ப்புரை வழங்கினார்.

2. 2014ம் ஆண்டு S-10 பள்ளிக்கரணை காவல் நிலைய கொலை வழக்கில்தலைமறைவான 4 குற்றவாளியை கண்டுபிடித்து நீதிமன்ற விசாரணைக்கஆஜர்படுத்திய பெண் தலைமைக் காவர்கடந்த 30.10.2014 அன்று இரவு சுமார் 10.45 மணியளவில், ஐ.டி.நிறுவனத்தில்வேலை செய்து வந்த கோட்டா்ரீ ஹர்ஷா என்பவர், பள்ளிக்கரணை, புதிய குடிசைமாற்றுவாரிய குடியிருப்பு அருகே சென்று கொண்டிருந்தபோது, 4 நபரகள் ஹர்ஷா்ரீகோட்டாவை வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டபோது, பணம் தரமறுத்ததால், அந்த நபர்கள் ஹர்ஷா்ரீ கோட்டாவை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இது தொடர்பாக, S-10 பள்ளிக்கரணை காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகள் தேவநேன் (எ) சேட்டு,  ான்சன், தனசேகர், மணிகண்டன் ஆகிய         4 நபர்களை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்குஉட்படுத்தினர்இவ்வழக்கு தொடர்பாக, லந்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றுவந்த நிலையில், வழக்கு விசாரணைக்கு மேற்படி 4 குற்றவாளிகளும் முறையாக ஆஜராகமல்தலைமறைவாகிர். S-10 பள்ளிக்கரணை காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற பணிகள்கவனித்து வரும் தலைமைக் காவலர் திருமதி.K.காமாட்சி (பெ.த.கா.35568) என்பவர்தலைமறைவான மேற்படி குற்றவாளிகளை கண்டுபிடித்து, அழைப்பாணையை சார்வு செய்து,நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர்படுத்தினார். மேற்படி வழக்கில் விசாரணை தொடர்ந்துநடைபெறுகிறது.

3. 2003ம் ஆண்டு கால் டாக்சி டிரைவரை கடத்திச் சென்று கொலை செய்ததுதொடர்பான S-11 தாம்பரம் காவல் நிலைய கொலை வழக்கில் தொடர்புடைய 28சாட்சிகளை கண்டுபிடித்து, அழைப்பாணை சார்வு செய்து, நீதிமன்றத்தில்ஆஜர்படுத்திய  பெண் காவலர்கடந்த 04.3.2003 அன்று ஊருக்கு செல்ல கால்டாக்சியை பதிவு செய்து கொண்டு, ராஜபாபு என்ற கால்டாக்சி டிரைவரை அழைத்துக் கொண்டு, ஈரோடு மாவட்டம், பெருந்துறை புரசைகாட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று, கால் டாக்சி ஓட்டுநர் ராஜபாபுவைதாக்கி, பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்து, கால்டாக்சியை திருடிச் சென்றனர். இதுதொடர்பாக ஈரோடு மாவட்டம், பெருந்துறை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, பின்னர் இவ்வழக்கு             S-11 தாம்பரம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, எதிரிகள்1.ஆனந்தன், வ/23, த/பெ.தாஜா, காரிப்பட்டி, சேலம் மாவட்டம், 2.ரகுமான் (எ) அப்துல்ரகுமான், வ/24, த/பெ.முனாவர், காரியமங்கலம், தர்மபுரி மாவட்டம், 3.தலைப்பையன் (எ) பச்சைமுத்து, வ/20, த/பெ.சேட்டு, துக்கம்பட்டி, சேலம் மாவட்டம் ஆகிய                                 3 நபர்களை கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்மேற்படி கொலை வழக்கின் விசாரணை செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் அமர்வுநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தாம்பரம் காவல் நிலையத்தில் நீதிமன்ற அலுவல்புரியும் பெண் காவலர் திருமதி.P.ராகவி, (கா.எண்.50332) மேற்படி கொலை வழக்கில்தொடர்புடைய 28 சாட்சிகளுக்கு, கடந்த 4 மாதங்களில் அழைப்பாணைகளை சார்வு செய்துநீதிமன்ற விசாரணைக்க  ஆஜர்படுத்தியுள்ளார். மேற்படி வழக்கில் விசாரணைதொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

4. தி.நகர் பகுதியில் சாலையில் கிடந்த ரூ.25,500/- அடங்கிய பணப்பையை காவல்நிலையத்தில் ஒப்படைத்து, உரியவரிடம் ஒப்படைக்க உதவிய விமல் என்பவருக்குபாராட்டுசென்னை, நந்தனம் பகுதியில் வசித்து வரும் விமல், வ/40, த/பெ.சுரேந்திரன் என்பவர்அண்ணா சாலையிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.விமல் கடந்த 25.11.2021 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில், பணி முடித்து வீட்டிற்குசென்று கொண்டிருந்தபோது, பாண்டிபஜார், தபால் நிலையம் அருகில் உள்ள சாலையில், ஒரு பை இருந்ததை கண்டு அதை எடுத்து பார்த்தபோது, அதில் பணம் இருந்ததுதெரியவந்தது. அங்கிருந்தவர்கள் யாரும் உரிமை கோராததால், விமல், மேற்படிபணப்பையை, R-4 பாண்டிபஜார் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விவரங்களை கூறினார்.சம்பவ இடம் y  R-1 மாம்பலம் காவல் நிலைய எல்லை என்பதால், விமலை, காவலருடன் அழைத்துச் சென்று R-1 மாம்பலம் காவல் நிலையத்தில் பணம் இருந்த பையைஒப்படைத்து விவரங்களை கூறினார். காவல் குழுவினர் அந்த பையை சோதனைசெய்தபோது, அதில் ரூ.25,500/- இருந்தது தெரியவந்ததுஇந்நிலையில், தேனாம்பேட்டை ஆலயம்மன் கோயில் தெருவில் வசிக்கும்மணிகண்டன், வ/44, த/பெ.நந்தகோபால் என்பவர் R-1 மாம்பலம் காவல் நிலையத்திற்குவந்து, தான் வைத்திருந்த ரூ.25,500/- அடங்கிய பையை பாண்டிபஜார் பகுதியில்தவறவிட்டதாக புகார் கொடுத்தார். R-1 மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளர்திரு.சுரேஷ்குமார் மற்றும் காவல் குழுவினர் இருவரையும் விசாரணை செய்து, ஆவணங்களை சரிபார்த்து, ரூ.25,500/- அடங்கிய பணப்பையை மணிகண்டனிடம்ஒப்படைத்தார்.  மேலும், சாலையில் இருந்த பணப்பையை காவல் நிலையத்தில்ஒப்படைத்து உரியவரிடம் சேர்க்க உதவிய விமலுக்கு, மணிகண்டன் மற்றும் காவல்குழுவினர் நன்றி கலந்த பாராட்டுகள  ெரிவித்தனர்.

5. விருகம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து காவலரிடம் தகராறு செய்ததைசெல்போனில் வீடியோ எடுத்த போது, எதிரி காவலரின் செல்போனை பிடுங்கி கீழேபோட்டு உடைத்துவிட்டு தப்பினார். காவல் ஆணையாளர் பாதிக்கப்பட்ட போக்குவரத்துகாவலரை நேரில் அழைத்து புதிய செல்போன் வழங்கினார்.ஆர்-5 விருகம்பாக்கம் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகபணிபுரியும் திரு.சுதாகர், (மு.நி.கா.31060) என்பவர் கடந்த 03.12.2021 அன்று காலை சுமார்11.00 மணியளவில் ஆற்காடு சாலை, பிரான்தெரு சந்திப்பில் பணியிலிருந்து போது, வடபழனியிலிருந்து போரூர் நோக்கி எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரைமடக்கிப்பிடித்து விசாரணை செய்த போது, அவர் போக்குவரத்து காவலரிடம் அவதூறாகபேசி தகராறு செய்துள்ளார். உடனே போக்குவரத்து காவலர் தனது செல்போனில் வீடியோஎடுத்த போது, கோபமடைந்த நபர் மேற்படி போக்குவரத்து காவலரின் செல்போனைபிடுங்கி கீழே போட்டு உடைத்து விட்டு, இருசக்கர வாகனத்தை போட்டு விட்டு அங்கிருந்ததப்பியுள்ளார்.  போக்குவரத்து காவலர் சுதாகர் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி                            ஆர்-7 கே.கே.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். தப்பியோடிய குற்றவாளியைபோலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.  தகலறிந்  ென்னை பெருநகர காவல்ஆணையாளர் மேற்படி போக்குவரத்து காவலர் திரு.சுதாகரை நேரில் அழைத்து அவருக்குபுதிய செல்போன் வழங்கினார்.  W-22 மயிலாப்பூர்  அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில்சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த காவல் ஆய்வாளர்திருமதி.கமலாதேவி (தற்போது கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர்), நீதிமன்ற அலுவல் புரியும் தலைமைக்காவலர் திருமதி.எட்டியம்மாள்,                             S-10 பள்ளிக்கரணை காவல் நிலைய 2014ம் ஆண்டு கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 4குற்றவாளிக்கு அழைப்பாணை சார்வு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நீதிமன்றஅலுவல் புரியும் தலைமைக்காவலர் திருமதி.K.காமாட்சி,             S-11 தாம்பரம் காவல்நிலைய 2003ம் ஆண்டு கொலை வழக்கின் சாட்சிகளான 28 நபர்களை கண்டுப்பிடித்துஅழைப்பாணை சார்வு செய்த நீதிமன்ற விசாரணைக்கு ஆஜர் செய்த பெண்காவலர்திருமதி.P.ராகவி, (கா.எண்.50332) மற்றும் தி.நகர் பகுதியில் சாலையில் கிடந்த பணத்தைகாவல் நிலையத்தில் ஒப்படைத்த திரு.விமல் ஆகியோரை சென்னை பெருநகர காவல்ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (07.12.2021) நேரில் அழைத்துவெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.