சிறந்த காவலர்களை சென்னை நகர ஆணையர் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்

1. 2014ம் ஆண்டு 8 நாட்கள் பரோலில் வெளியே வந்து 7 வருடங்களாக தலைமறைவானஇரட்டை ஆயுள் தண்டனை குற்றவாளியை அரும்பாக்கம் காவல் ஆய்வாளர்தலைமையிலான காவல் குழுவினர் பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  சென்னை, அரும்பாக்கம், ஶ்ரீசக்தி நகரில் வசித்து வந்த செந்தில்குமார், வ/41, த/பெ.அண்ணாமலை என்பவர் K-8 அரும்பாக்கம் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி ஆவார்.செந்தில்குமார் 2005ம் ஆண்டு இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்டது தொடர்பாக K-8 அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், இவ்வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த பூந்தமல்லி கூடுதல் அமர்வுநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை முடிவடைந்து, 14.12.2009 அன்று கனம் நீதிமன்றம் எதிரிசெந்தில்குமாருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.2,000/- அபராதம் விதித்து, செந்தில்குமார்சிறையில் அடைக்கப்பட்டார்.   இந்நிலையில் கடந்த 11.02.2014ம் ஆண்டு 8 நாட்கள் பரோலில் வெளியே வந்த குற்றவாளிசெந்தில்குமார் அதன்பின்னர் தலைமறைவாகிவிட்டார். அதன்பேரில் குற்றவாளி செந்தில்குமாரைதீவிரமாக தேடி வந்த நிலையில், K-8 அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.G.பிரபு, உதவிஆய்வாளர் திரு.A.பன்னீர்செல்வம், தலைமைக் காவலர் T.சரவணன் (த.கா.29621) மற்றும் காவலர்M.முகமது சலாவுதீன் (கா.56884) தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசியதகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 25.11.2021 அன்று கோயம்பேடு மார்க்கெட் பகுதியில்பதுங்கியிருந்த குற்றவாளி செந்தில்குமாரை சுற்றி வளைத்து, கைது செய்து, நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தினர். கடந்த 7 வருடங்களாக தலைமறைவாக இருந்த இரட்டை ஆயுள்தண்டனைகுற்றவாளியை பிடித்த       K-8 அரும்பாக்கம் காவல் குழுவினரை உயரதிகாரிகள் பாராட்டினர்.
 
2. எம்.கே.பி.நகர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பின்பக்க ஜன்னலை உடைத்துஉள்ளே நுழைந்து திருட முயன்ற நேபாளத்தைச் சேர்ந்த             2 நபர்களை கைதுசெய்த சுற்றுக் காவல் ரோந்து வாகன காவல் குழுவினர்.  சென்னை, வியாசர்பாடி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் இயங்கி வரும் Jana Small Finance என்ற தனியார் வங்கியில் 19.12.2021 அன்று அதிகாலை சுமார் 04.00 மணி அளவில் மர்ம நபர்கள் சிலர்வங்கியில் புகுந்து திருட முயல்வதாக, சிசிடிவி கேமரா மூலம் ஐதராபத்திலுள்ள தலைமைஅலுவலகத்தில் கண்காணித்து, மேற்படி வங்கியின் மேலாளருக்கு தகவல் கொடுத்ததின்பேரில், வங்கிமேலாளர் தனது வங்கியின் Field Service  Executiveயாக பணிபுரியும் திரு.முரளி என்பவருக்கு தகவல்கொடுத்துள்ளார்.   தன்பேரில், முரளி சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று அருகில் பணியிலிருந்த P-5 எம்.கே.பி.நகர் ரோந்து காவல் வாகன பொறுப்பு/உதவி ஆய்வாளர் திரு.M.P.பெருமாள் மற்றும் வாகனஓட்டுநர்/முதல்நிலைக் காவலர் N.சுப்பிரமணி (மு.நி.கா.40112) ஆகியோருக்கு தகவல்கொடுத்துள்ளார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது, வங்கியின் பின்புறமுள்ள கழிவறையின் ஜன்னலை உடைக்கப்பட்டு மர்ம நபர்கள் உள்ளே சென்றிருப்பதுதெரியவந்தது. உடனே காவல் குழுவினர் இருவரும் வங்கிக்குள் சென்றபோது, எதிரிகளில் ஒருவர்லேப்டாப்களுடன் தப்பியோடவே, காவல் குழுவினர் மற்றொரு எதிரி தாங் பகதூர், வ/40, த/பெ.போகன்பகதூர், மகேந்திரா நகர், நேபாளம் என்பவரை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு, தப்பியோடிய மற்றொருகுற்றவாளியான சாஹர்தமாய், வ/25, த/பெ.சந்திர பகதூர் தமாய், வசந்தலா ஞ்சன்பூர், நைஜி,நேபாளம் என்பவரை சில மணி நேரங்களில் கைது செய்தனர். அவரிடமிருந்து 2 லேப்டாப்கள் பறிமுதல்செய்யப்பட்டது. காவல் குழுவினரின் துரித நடவடிக்கையால் மேற்படி தனியார் வங்கியில் நடைபெறஇருந்த கொள்ளை தடுக்கப்பட்டது.
3. மாதவரம் பகுதியில் லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த வழக்கில் 3 நபர்கள் கைது. 1 தங்க மோதிரம், 1 கைக்கடிகாரம், 1 வெள்ளி கைச்செயின், ரூ.20,000/-, 4 செல்போன்கள் மற்றும் 1 ஆட்டோ பறிமுதல்.

 

திருச்சி மாவட்டம், துறையூர், மருவத்தூர், கோட்டயம் தெருவில் வசித்து வரும் முரளிதரன், வ/29, த/பெ.வடிவேல் என்பவர் லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். முரளிதரன் 19.12.2021 அன்றுஅதிகாலை சுமார் 02.15 மணியளவில் மாதவரம், மஞ்சம்பாக்கம் பகுதியில் உள்ள KVT லாரி பார்க்கிங்அருகில் லாரியை நிறுத்திவிட்டு தூங்கி கொண்டிருந்த போது, அங்கு ஆட்டோவில் வந்த 4 நபர்கள்மேற்படி முரளிதரனிடம் கத்தியைக்காட்டி மிரட்டி அவர் அணிந்திருந்த 1/2 சவரன் தங்க மோதிரம், 1 கைக்கடிகாரம், 1 வெள்ளி கைச்செயின் மற்றும் 1 செல்போனை பறித்துக் கொண்டு, அவரைஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள ATM மையத்திற்கு அழைத்துச் சென்று முரளிதரனின்ATM  கார்டிலிருந்து  பணம் ரூ.20,000/-ஐ எடுத்துக்கொண்டு இருந்த போது, அவ்வழியே ரோந்து சென்றM-1 மாதவரம் காவல் நிலைய ரோந்து வாகனத்தை பார்த்ததும், 4 எதிரிகளும் ஆட்டோவை அங்கேயேவிட்டு தப்பியோடினர். உடனே ரோந்து காவல் வாகன பணியிலிருந்த தலைமைக்காவலர்D.கார்த்திக்கேயன், (த.கா.36303) மற்றும் வாகன ஓட்டுநர்/ஆயுதப்படை முதல்நிலைக் காவலர்M.சுரேஷ்பாபு (மு.நி.கா.53219) ஆகியோர் சுதாரித்துக் கொண்டு துரத்திச்சென்று தப்பி டிய நபர்களில்2 நபர்களை மடக்கிப்பிடித்தனர். உடனே, காவல் குழுவினர் கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுக்கவே,  இரவ ரோந்து பணியிலிருந்த தலைமைக்காவலர் D.பழனிகுமார் (த.கா.43753), முதல்நிலைக்காவலர் K.தீர்த்தகிரி (மு.நி.கா.51671) மற்றும் காவலர் R.ரோவித் (கா.42754) ஆகியோர்தலைமறைவான குற்றவாளி ஒருவரை பிடித்து, M-1 மாதவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  M-1 மாதவரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர்விசாரணையில் பிடிபட்ட நபர்கள் 1.கோபிநாத், வ/28, த/பெ.துரை, எண்.5, கருமாரியம்மன் கோயில்தெரு, கொடுங்கையூர், சென்னை 2.மகேஷ்குமார், வ/23, த/பெ.நாகேந்திரன், எண்54, தென்றல் நகர், 3வது குறுக்கு தெரு, கொடுங்கையூர், சென்னை, 3.மணிகண்டன், வ/24, த/பெ.நாகேந்திரன், எண்.54, தென்றல் நகர், 3வது குறுக்குதெரு, கொடுங்கையூர், சென்னை என்பதும், லாரி ஓட்டுநர் முரளிதரனிடம்வழிப்பறியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 1/2 சவரன் எடையுள்ள 1 தங்க மோதிரம், 1 கைக்கடிகாரம்,             1 வெள்ளி கைச்செயின், ரொக்கம் ரூ.20,000/-, 4 செல்போன்கள், 1  கத்திமற்றும் 1 ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய நேசமணி என்பவரை காவல் குழுவினர்தீவிரமாக தேடிவருகின்றனர்​​மேற்படி சம்பவங்களில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய் காவல்அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் தக்க சமயத்தில் போலீசாருக்கு தகவல் கொடுத்த தனியார் வங்கிField Service Executive திரு.D.முரளி ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர்திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் இன்று (04.01.2022) நேரில் அழைத்து வெகுமதி மற்றும்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.