விரைவாக வழக்கை முடித்த மைலாப்பூர் பெண் காவலர்களுக்கு ஆணையர் பாராட்டு

கடந்த 19.05.2021 அன்று சென்னை பெருநகர காவல், மயிலாப்பூர் காவல்மாவட்டத்தில் வசிக்கும் 8 வயது சிறுமிக்கு, அதே பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுவன்பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் W-23 ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவுகள்உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து மேற்வடி வழக்கில் சம்பந்தப்பட்ட 16 வயது சிறுவனை பிடித்து சிறார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறுவர் கூர்நோக்குஇல்லத்தில் சேர்க்கப்பட்டார்.

இவ்வழக்கு தொடர்பான விசாரணை கெல்லீஸ், இளஞ்சிறார் நீதிமன்றத்தில் நடத்துவந்த நிலையில், W-23 இராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராகபணிபுரிந்த திருமதி.அந்தோணி விசித்ரா, ( தற்போது W-22 மைலாப்பூர் அனைத்து மகளிர்காவல் நிலையம்) நீதிமன்ற அலுவல் பணிபுரியும் பெண் தலைமைக்காவலர்கள்திருமதி.ஜெய்சீலி திருமதி.ஷிலா, மற்றும் காவல் குழுவினர் 22 நாட்களில் விரைவாககுற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்தியும் வழக்குநடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணித்து வந்த நிலையில், நீதிமன்ற நடவடிக்கைகளின்படி வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த 31.08.2021 இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சிறுவனை 1 வருடம் பெற்றோர்கள் உரிய கவனிப்பு மற்றும் பாதுகாப்புடன் கண்காணிக்குமாறு சிறுவர் நீதிமன்ற நீதிபதி  உத்தரவிட்டார்.

போக்சோ வழக்கில் விரைவாக விசாரணை செய்து 22 நாட்களில் குற்றப்பத்திரிகைதாக்கல் செய்து வழக்கை முடித்து வைத்த W-22 மைலாப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் அந்தோணி விசித்ரா, நீதிமன்ற அலுவல் பணிபுரியும் பெண் தலைமைக்காவலர்கள் ஜெய்சீலி, ஷிலா, ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., 07.01.2022 அன்று  நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேற்படி போக்சோ வழக்கில் விரைவாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் ழக்கினை முடித்தமைக்காக தமிழக முதலமைச்சர் சட்டசபையில் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.