சென்னை குதிரைப்படை 1780ம் ஆண்டு, சென்னை மாகான ஆளுநர் திரு.வில்லியம்லாங்கன் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, அவரது பாதுகாப்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டுவந்தது. பின்னர் 1800ம் ஆண்டு முதல் இப்படையில் உள்ள குதிரைகள் சென்னை காவல்கண்காணிப்பாளர் திரு.வால்டர் கிராண்ட் அவர்களால், சென்னை காவல்துறைக்குபயன்படுத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு 1926ம் ஆண்டு முதல் சென்னை காவல் குதிரைப்படை ஒரு சார்ஜன்ட்தலைமையில் ஒரு தனிப்பிரிவாக ஆரம்பிக்கப்பட்டு, சென்னை காவல் ரோந்து பணிமேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன் பிறகு சென்னை காவல் குதிரைப்படையில் பல்வேறுமாற்றங்கள் செய்யப்பட்டு, தற்போது, சென்னை பெருநகர காவல் மோட்டார் வாகனப்பிரிவு, துணை ஆணையாளர் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் (தலைமையிடம்) தலைமையில்சென்னை பெருநகர காவல் குதிரைப்படை எழும்பூரில் இயங்கி வருகிறது.
சென்னை பெருநகர காவல் குதிரைப்படையின் தலையாய பணியானது, தினசரிகாலை மற்றும் மாலை நேரங்களில் கடற்கரை பகுதியில் தீவிர ரோந்து பணிகள்மேற்கொள்வது ஆகும். மேலும், சட்டம், ஒழுங்கு பாதுகாப்பு பணி, குடியரசு தினம் மற்றும்சுதந்திர தின அணி வகுப்பு, பண்டிகை காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணி, அரசுமற்றும் காவல்துறை இணைந்து நடத்தும் அரசு நிகழ்ச்சிகளில் அலங்கார அணி வகுப்பு,முக்கிய பிரமுகர்களின் அலங்கார அணி வகுப்பு மற்றும் இதர பாதுகாப்பு பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது, சென்னை பெருநகர காவல் குதிரைப்படையானது 27குதிரைகளை கொண்டு இயங்கி வருகிறது. மேற்படி 27 குதிரைகளும், காவல் ஆளிநர்களின்கட்டுப்பாட்டில், காவல் ஆளிநர்களுடன் ரோந்து பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளைசெய்து வருகிறது. இப்பிரிவில் 1 உதவி ஆய்வாளர், 25 ஆண் காவல் ஆளிநர்கள் மற்றும் 5 பெண் காவலர்கள் மேற்படி 27 குதிரைகளையும் பராமரித்து, பணி செய்து வருகின்றனர். குதிரைப்படையைச் சேர்ந்த முதல்நிலை பெண் காவலர்கள் 1.திருமதி.M.ஜாஸ்மின்,(மு.நி.பெ.கா.29738), 2.P.சுகன்யா (மு.நி.பெ.கா.30226), பெண் காவலர்கள் 3.R.மாளவிகா(பெ.கா.54215), 4.T.புனிதா (பெ.கா.54222), 5..C.மஹாலஷ்மி (பெ.கா.54892) ஆகியோர்ஆண்களுக்கு நிகராக குதிரைகளை பராமரித்தும், குதிரைகளுக்கு பயிற்சி அளித்தும், குதிரைகள் மீது அமர்ந்து, பாதுகாப்பு பணிகள், ரோந்து பணிகள் மேற்கொண்டுவருகின்றனர். இதனால் பொதுமக்களின் பாராட்டுக்களை பெற்று, மிகுந்தஉற்சாகத்துடனும், உத்வேகத்துடனும் சிறப்பாக காவல் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும், 2020ம் ஆண்டு, ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற 38வது அகில இந்தியகாவல் குதிரைப்படையினருக்கான விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு காவல்குதிரைப்படை சார்பாக பெண் காவலர் P.சுகன்யா (மு.நி.பெ.கா.30226) கலந்து கொண்டு2ம் பரிசு பெற்றார். மேலும், 2022ம் ஆண்டுக்கான 39வது அகில இந்திய காவல்குதிரைப்படை விளையாட்டு போட்டிக்கு குதிரையுடன் தீவிர பயிற்சி மேற்கொண்டுவருகிறார்.