சென்னை எழும்பூரில் இயங்கி வரும் காவலர் மருத்துவமனையில் காவல் அதிகாரிகள்ஆளினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு இலவச மருத்துவ சிகிச்சைவழங்கப்படுகிறது. சென்னை பெருநகரில் முன்களப் பணியாளர்களாக பணி செய்துவரும்காவலர்களின் நலனுக்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப.முயற்சியின் பேரில் காவலர் குடும்பத்தைச் சேர்ந்த கொரோனாநோயாளிகளுக்கு அனைத்து உயர்தர சிகிச்சை வசதிகளும் கிடைக்கும் வகையில்ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கொரோனா சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களபணியாளர்கள் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக PPE Kit கவச உடைஅணிந்து பணிபுரிந்து வருகின்றனர். தற்போது பயன்படுத்தி வரும் PPE Kit கவச உடைகள்ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் வகையில் இருந்து வந்தது. மேலும் கவச உடையைஅணிந்து பணி செய்யும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் முன்களப்பணியளார்கள் தற்போது பயன்பாட்டில் உள்ள PPE Kit கவச உடையை அணிவதில் அசௌகாரியத்தைஉணர்ந்து வந்தனர். இதற்கு மாற்று ஏற்பாடாக மத்திய காவல் பாதுகாப்பு படை (CRPF), முன்களப்பணியாளர்களுக்கு உதவும் வகையில் அணிவதற்கு வசதியான, உயர்தரமான, மீண்டும் துவைத்து ஒரு வருடத்திற்கு மேல் பயன்படுத்தும் வகையிலும், சுற்று சூழலுக்குபாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மிகவும் பாதுகாப்பான PPE Kit (Personal Protective Equipment Kit) கவச உடையை தயாரித்துள்ளனர். மத்திய காவல் பாதுகாப்பு படையைச்சேர்ந்த (CRPF) Rapid Action Force Team தயாரித்துள்ள மேற்படி விலையுயர்ந்த PPE Kit கவச உடையை சென்னை பெருநகர காவல் மருத்துவமவனைக்கு CRPF விரைவு அதிரடிப்படை 97வது பட்டாலியன் தளவாய்திரு.ஶ்ரீ எரிக் கில்பர்ட் ஜோஸ் அவர்கள் வழங்க முன் வந்தார். அதன் பேரில் சென்னைபெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப, அவர்களிடம் இன்று(20.01.2022), சென்னை பெருநகர காவல் மருத்துவமனை முன்கள பணியாளர்களானமருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பயன்பாட்டிற்காக, 40 PPE Kit (Personal Protective Equipment Kit) கொரோனா தொற்று பாதுகாப்பு கவச உடைகளை வழங்கினார். இந்நிகழ்வில் துணை ஆணையாளர் தலைமையிடம் L.பாலாஜி சரவணன்,எழும்பூர் காவல் மருத்துவமனை தலைமை மருத்துவர் B.சுந்தர்ராஜ், மற்றும் காவல்அதிகாரிகள் கலந்துகொண்டனர்.